________________
பாகுபாடு 39 இளம் பாடுதலும், தெய்வத்தை வழிபட்டுப் பாடுதலும், பெண்கள் கூடி விளையாடிப் பாடுதலும் இத்தகைய பாட்டுக் களாகும். ஆய்ச்சியர் குரவை, வேட்டுவ வரி, மாரியம்மன் பாட்டு, கும்மிப் பாட்டு, கோலாட்டப் பாட்டு, பாவை நோன்பின் பாட்டு, அம்மானைப் பாட்டு முதலியன இவ் வகையைச் சார்ந்தவை. இவற்றுள் கூட்டத்தினரின் உணர்ச்சி புலப்படுதல் காண்க. சார்பு இலக்கியம் கலையின்பம் தவிர வேறொரு பயனும் கருதாமல் புலவர் இயற்றியன கேர் இலக்கியம் (pure literature) என்றும், அரசியல் சமயம் முதலிய நோக்கங்கள் கொண்டும் பரிசு முதலியன கருதியும் இயற்றியன சார்பு இலக்கியம் (applied Literature) என்றும் பாகுபாடு செய்யப்படும்.* இவற்றுள் முன்னைய கலை கலைக்காகவே என அமைந்தவை எனவும், பின்னவை கலை பிற காரணத்திற்காக என அமைந்தவை எனவும் கூறுவர். இயற்றும் காலத்தில் சார்பு இலக்கியமாகத் தோன்றி யவை, பின்னர்க் காலப் போக்கில் நேர் இலக்கியமாக வாழ் தல் உண்டு.சாத்தனாரும் திருத்தக்க தேவரும் சேக்கிழாரும் சமய வளர்ச்சியே நோக்கமாகக் கொண்டு மணிமேகலையும் சிந்தாமணியும் பெரிய புராணமும் இயற்றினர். அக்காலத் தில் அந் நூல்கள் சமய வளர்ச்சியைச் சார்ந்து அதற்குக் கருவிகளாகவே பயன்பட்டன. இன்று அவை பொதுவாகப் பிற சமயத்தாராலும் படிக்கப்பட்டு நேர் இலக்கியமாக
- By applied literature, we mean work which can be regarded as literature by ignoring its author's purpose; what he intended as a means to an end we take as an end in itself. But in pure literature no such exclusion of the anthor's purpose is required.
-L.Abarcrombie, Principles of Literary Criticism, p.28.