________________
பாகுபாடு 41 கூறுமிடத்தில், அழிசி என்னும் ஒருவனுடைய காட்டில் உள்ள நெல்லிக் காய்களின் புளிச்சுவையைப் பற்றி அந்த வாவல் எங்குவது போல் என்கிறாள். அங்கே, பொதுவாக நெல்லியம் புளிச்சுவை என் ன்று கூறாமல், அழிசியின் காட்டில் உள்ள நெல்லி என்று இடம் குறிப்பிட்டுக் கூற வேண்டிய காரணம் என்ன? அதைப் பாடிய புலவர், அப் யாட்டில் தம் புரவலனாகிய அழிசியின் பெயரை நிலை நாட்டக் கருதினாரோ என எண்ண வேண்டியுள்ளது. அவ்வாறாயின் அது சார்பு இலக்கியம் என்று கூறத் தக்கதாகும். அத் தகைய பாட்டுக்கள் சில அகப்பொருள் நூல்களில் உள்ளன. கற்பனையில் மிதப்பன வாழ்க்கையில் ஒவ்வொருவர்க்கும் இருவகை விருப்பம் உள்ளன. ஒவ்வொரு வேளையில் ஒவ்வொன்று சிறந்து விளங்கும். வாழ்க்கையோடு ஒட்டியதாக, நாம் அறிந்து யழகியதாக, நமக்கு நெருங்கியதாக இருப்பதை விரும்புவது ஒருவகை விருப்பம். வாழ்க்கையோடு ஒட்டாததாக, நாம் பழகியறியாததாக, நமக்கு எட்டாததாக உள்ளதை விரும்பு வது மற்றொருவகை விருப்பம். முன்னது நனவு போன்றது. பின்னது கனவு போன்றது. முன்னது உண்மை மிகுந்தது. பின்னது கற்பனை மிகுந்தது. நாம் ஒவ்வொருவரும் இரண்டையும் விரும்புகிறோம். ஆனால், ஒன்றை விரும்பும் போது மற்றொன்றைப் புறக்கணிக்கிறோம். ஒரு துறையில் ஒன்றை விரும்பி, மற்றொரு துறையில் வேறொன்றை விரும்புவதும் உண்டு. நாடகத்திலும் திரைப்படத்திலும் கற்பனையில் மிதப்பதை (romanticism) விரும்பி, இலக்கியத் தில் உண்மைமிகுந்ததை (realism) விரும்புவோர் உள்ளனர்.