________________
44 இலக்கிய மரபு தன்னைத்தான் போற்றா தொழுகுதல் நன்கின்னா முன்னை உரையார் புறமொழிக் கூற்றின்னா கன்மை யிலாளர் தொடர்பின்னா ஆங்கின்னா தொன்மை உடையார் கெடல். ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும். இவை சிறந்த கருத்துக்களை இனிய ஓசையமைய எடுத் துரைப்பன ஆயினும், கலைப் பெற்றி இல்லாதன; பாட்டு என்று கூறுதற்கு உரியன அல்ல. அறுசுவை உண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட மறுசிகை நீக்கி உண் டாரும் - வறிஞராய்ச் சென்றிரப்பர் ஓரிடத்துக் கூழெனில் செல்வமொன்று உண்டாக வைக்கற்பாற்று அன்று. இன்றும் வருவது கொல்லோ நெருகலும் கொன்றது போலும் நிரப்பு. இவை உணர்ச்சியும் கற்பனையும் ஊட்டி உரைத்தலின் பாட்டு எனத் தக்கவை ஆகும். அறிவுறுத்துவதும் வழிகாட்டுவதும் அறவுரை யாளரின் கடமையாகும். உணர்ச்சியூட்டி விளக்குவதும் ஆற்றலளித்து மகிழ்விப்பது கலைஞரின் கடமையாகும். ஆதலின் நீதிநூல் வேறு; பாட்டு வேறு. பாட்டில் நீதிகள் அமையலாம்; அது வேறு நிலை. நீதிகள் மட்டும் கூறும் நூல் வேறு. பாட்டில் நீதியுரைக்கு மிடத்தும் உணர்ச்சியும் கற்பனைவளமும் உண்டு.
- கபிலர்,இன்னா நாற்பது, 33.
திருக்குறள், 131. நாலடியார், செல்வ நிலையாமை, I. சீ திருக்குறள், 1048. வெறு