________________
46 இலக்கிய மரபு பாட்டுக்கள் என்று உள்ளம் உணர்வதில்லை என்கிறார் வின்செஸ்டர்.* நீதி நூல்கள் நேரே நீதிகளை எடுத்துரைப்பது குறை அன்று; அவை அமைய வேண்டிய முறையும் அதுவே. அவை உரைநடையிலும் அமையலாம்; செய்யுளிலும் அமையலாம். னால் காவியம் முதலிய இலக்கிய வகைகள் நீதிகளை உணர்த் துவதும் குறை அன்று; ஆனால் அவை நீதிகளை உணர்த்த வேண்டிய முறை வேறு. நீதிகளை நேரே வாய்பாடு போல் எடுத்துக்கூறாமல், இலக்கியத்தைக் கற்று அதன் கற்பனை யில் திளைத்து உணர்ச்சி வயப்பட்டு நிற்போரின் உள்ளத் தில் அந்த நீதிகள் தாமே பதியுமாறு அமைவதே முறை யாகும் ஆகவே, தூவிய ஆசிரியர் தாமே முன்வந்து நீதி களை எடுத்துக்கூறாமல், காவிய மாந்தரின் வாயிலாகவோ நிகழ்ச்சிகளின் விளைவாகவோ நீதிகள் தாமே விளங்குமாறு அமைப்பது கடமையாகும். எனவே, காவியங்களை நீதி நூல்களாகக் கருதுவதும், நீதி நூல்களைக் கலைச் செல்வங்களாகக் கருதுவதும் பொருந்தாது அறவுரைகளை ஒரு செய்யுளில் அமைத்துத் தருவதால், அது பாட்டாகாது. அறவுணர்ச்சியை நெஞ் சில் பதியவைப்பதால், பாட்டுக்குக் கலைச்சிறப்புக் குன்றாது. நீதிநூல், நீதிமன்றம் போலவும் ஆசிரியர் போலவும் அமைந்து நீதிகளை அறிவிக்கும். ஆயின்,பாட்டு அவற்றை உணர்த்தும் முறையோ, மலையும் காடும் ஆறும் கடலும் மரமும் செடியும் நமக்குச் சில பல உண்மைகளை
- While didactic verse may be genuine,poetry, we have an instinc- tive feeling that it cannot be poetry of the highest rank.
-C. T. Winchester, Some Principles of Literary Criticism, p. 234.