உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய மரபு.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

58 மாறுதல்கள் இலக்கிய மரபு தமிழ்த் தண்டியாசிரியர் கி.பி.11-ஆம் நூற்றாண்டினர். அவர் நூலுக்கு முதல் நூலாக இருந்தது வடமொழியில் தண்டி என்பவர் எழுதிய காவ்யதர்சம். அவர் கி.பி. 7-ஆம் நூற்றாண்டினர் என்பர்.சிலப்பதிகாரம் அவர் காலத்துக்கு முற்பட்டது; கி.பி.3 அல்லது 4-ஆம் நூற் றாண்டில் இயற்றப்பட்டது. அக்காலத்தில் காவியத்திற்கு இலக்கணம் இன்னது என்று எழுதப்படவில்லை. ஆயினும் இளங்கோவடிகளின் தாவியம் பெரும்பாலும் பிற்காலத்தார் கூறுவனவற்றை எல்லாம் கொண்டு விளங்குகிறது. பிற் காலக் காவியங்களில் உள்ளவாறு, கதிரவன் தோற்றம், மறைவு, திங்களின் தோற்றம், பெரும்பருவம் ஆறன் வருணனை, நானில் வருணனை முதலியன சிலப்பதிகாரத் தில் விரிவாக இல்லை; தனித்தனியே வருணனைப் பகுதி களாகவும் இல்லை. ஆயினும்,கதை யமைப்புக்குத் துணை செய்யும் வகையில், அவை எல்லாம் சுருக்கமாகவும் அழ காகவும் கூறப்பட்டுள்ளன. காவியத்தின் அமைப்பு எவ்வளவு திருந்திய முறையில் ஏற்பட்டபோதிலும், காவியத்தின் மிகழ்ச்சிகளுக்கு இடையே பழங்காலச் சமுதாயம் விளக்கப்பட் டிருக்கும். பழைய சமு தாயத்தில் இருந்த குறைகளும் இடம் பெற்றிருக்கும்.*நாக ரிகம் மிக்க புலவர் ஒருவர் வந்து இயற்றிய காவியத்திலும், Great epic poetry will always frankly accept the social conditions within which it is composed; but the conditions contract and intensify the conduct of the poem or allow it to dilate and absorb larger matter, according as the narrow primitive terrents of inan's spirit broaden into the greater but slower volume of civilized life. The charge is neither desirable nor undesirable; it is merely inevitable. It means that epic poetry has kept up with the development of human life. -L. Abercrombie, The Epic, p. 26. எழுத்துணரியாக்கம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_மரபு.pdf/62&oldid=1681802" இலிருந்து மீள்விக்கப்பட்டது