________________
இலக்கிய மரபு எழுதும் நாவலைவிட, அதே அளவுக்குத் திறமையுள்ள ஒருவர் எழுதும் நாடகம், சிறப்புக் குறைந்ததாய்விடும். * ஆதலின், நாடக ஆசிரியரின் பொறுப்பு மிகுதியாகும். நாடகம் எழுதுதல் ஆசிரியர்க்கு அரிய முயற்சியாக இருத்தல் போலவே, நாடகம் படித்து உணர்தலும் அரிய முயற்சியாகும். நாடகம் நடிக்கப்படும்போது, நடிகர்களின் செயல்களும் சேர்ந்து அமைவதால், காண்பவர்க்கு எளி தில் விளங்குகிறது. ஆனால், நாடகநூல் படிக்கப்படும் போது, நடிகர்களும் அவர்களின் செயல்களும் இல்லாமல், உரையாடலே பெரும்பான்மையாக இருப்பதால், படிப்ப வர்க்கு விளங்குதல் அருமையாக உள்ளது. நடிகர்களின் செயல்களை எல்லாம் கற்பனையில் அமைத்துச் சேர்த்துக் கொண்டு நாடகத்தைப் படிக்க வல்லவர்களுக்கே, நாடக நூல் விளங்கும். அவ்வாறு கற்பனை செய்து அமைத்துக் கொள்வது, பலர்க்கும் எளிதில் வருவது அன்று. கற் பனைத் துறையில் பயிற்சி பெற்றவர்களுக்கே - பல நாடகங் களைப் படித்துப் படித்து நாடக மேடையைக் கற்பனை செய் யும் திறன் மிகப் பெற்றவர்களுக்கே - அது எளிதாகும். ஆகையால், பெரும்பாலோர்க்கு நாடகம் படிப்பது ஒரு வகையில் துன்பமான உழைப்பாக உள்ள ளது.
- Even a good dramatist's work will tend to be coarser than that of a novelist of equal ability. He has to make his effects more quickly and in a more obvious way.
--I. A. Richards, Principles of Literary Criticism, p. 231. † Since the imagination must supply the action not described in the poem itself, and since the imagination is a faculty made effective only by exercise, the reading of a drama is for the bulk of humanity a some- what exhausting task. --R. M. Alden, An Introduction to Poetry, p. 79.