உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய மரபு.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

நாடகம் 79 கூறத் தக்க கருத்துக்களையும் உணர்ச்சிகளையும் வெளிப்' படுத்த முடிகின்றது. சேக்ஸ்பியர் நாடகத்தில் நாடகமாந்தர் பேசும் தனி மொழிகள் உள்ளன. அவை மிகச் சிறப்பான உணர்ச்சி களும் கருத்துக்களும் உடையனவாகவும் அமைந்துள்ளன. அந் நாடகங்களைப் பின்பற்றித் தமிழில் எழுதிய நாடகங்கள் சிலவற்றிலும் தனிமொழிகள் உள்ளன. ஆயின், அவை' படிக்கும் நாடகங்களுக்குப் பொருந்துவனவே அல்லாமல், இன்று நடிக்கும் நாடகங்களுக்குப் பொருந்துவன அல்ல. ஏனெனில், சேக்ஸ்பியர்காலத்தில் நாடகங்கள் பகலில் நடிக்கப்பட்டன ; இரவில் நடிக்கப்படும் போதும், இக்காலத் தைப் போல் கண்ணைப் பறிக்கும் மின் விளக்குகள் நடிகரை யும் மக்களையும் பிரிக்கவில்லை. அக்காலத்து மேடைகளில் நடித்த நடிகர் பார்க்க வந்த மக்களை நெருங்கிப் பேசுதல் போலவே நடித்தனர். அத் தனிமொழிகளைப் பேசியபோது, அவர்கள் உண்மையில் தனிமை உணர்ந்து பேசவில்லை ; பார்க்கும் மக்களை நோக்கிப் பேசிய பேச்சுக்களாகவே அவை அமைந்தன.* ஆதலின் அக் கால நாடகங்களில் தனி' மொழிகள் பொருத்தமாக இருந்தன. இன்று அவை பொருந்தவில்லை. இன்று அவற்றிற்கு ஈடாக உள்ளவை குரல்மொழி கள்; நாடகமாந்தரின் மனச்சான்று பேசுதல் போல் அக் குரல்மொழிகள் பயன்படுகின்றன. மரபுகள் வடமொழி நாடகங்களுக்குச் சில மரபுகள் இருந்து வருகின்றன.கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் அசுவ கோஷரால் இயற்றப்பட்ட நாடகங்கள் முதல் அந்த மரபுகள்

  • J.B. Wilson, English Literature, p.98.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_மரபு.pdf/83&oldid=1681989" இலிருந்து மீள்விக்கப்பட்டது