உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய மரபு.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

நாடகம் 81 முற்காலத்தில் நாடக மேடையில் நடிக்க வருவோர் இன்னார் என்று மக்கள் உணரும் பொருட்டு அவர் இன்னார் என்று ஒருவன் நின்று அறிமுகப்படுத்துவான். அவன் கட்டியங்காரன் எனப்படுவான். அவன் நாடகத்தின இடை யிடையே பலமுறை வந்து பேசுதல் வழக்கம். இக்காலத் தில் அப்படி ஒருவன் வந்து பேசினால் காணும் மக்கள நாட்ட கத்தையே வெறுப்பார்கள். காணும் மக்கள் மகிழ்வதற்காக, கோமாளி ஒருவன் நாடகத்தின் இடையிடையே வருவது பழைய வழக்கம். அரசனுடைய அரண்மனையாயினும், புலவர்களின் அவைக் களமாயினும், கோயிலாயினும், சந்தையாயினும் எங்கும் அந்தக் கோமாளி வந்து பேசுவான். கதையில் விளங்காத பலவற்றை விளங்கச் செய்வதற்கு அந்தக் கோமாளியின் பேச்சு உதவியாக இருந்தது. இன்றைய நாடகங்களில் அப்படி ஒரு கோமாளி அடிக்கடி குறுக்கிடுவானானால், நாடகம் தரம் குறைந்தது எனப் பலராலும் பழிக்கப்படும். உரையாடல் நாடக மாந்தரைப் படைக்கும் போது, அவர்களின் செயல்கள் தெளிவாக விளக்கப்படல் வேண்டும்; அவர் களின் பண்புகள் புலப்படுமாறு செய்தல் வேண்டும்;செயல் களும் பண்புகளும் புலப்படுதல் பெரும்பாலும் அவர்களின் பேச்சுக்களின் வாயிலாகவே. ஆகையால், அப் பேச்சுக்கள், அவர்களுக்கு இயற்கையாக அமைவனவாக இருத்தல் வேண்டும். உலக வாழ்க்கையில் அவர்களின் நிலையில் உள்ள வர்கள் எவ்வாறு பேசுவார்களோ அவ்வாறு பேச்சுக்கள் அமைதல் வேண்டும். நாகரிகம் குறைந்த மக்கள் பேசும் தகாத சொற்கள் பலவும் அவ்வாறே நாடகத்தில் வர வேண்டும் என்பது கருத்து அன்று; அந்த அநாகரிகச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_மரபு.pdf/85&oldid=1681998" இலிருந்து மீள்விக்கப்பட்டது