உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய மரபு.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

நாடகம் 85 கண்ணகியைத் திருமணத்தின்போது வாழ்த்துவோர், << காதலனைப் பிரியாமல் தழுவிய கை நெகிழாமல் தீங்கின்றி வாழ்க" என்று வாழ்த்துகிறார்கள். நாடகம் காண்பவர்க்கு அந்த வாழ்த்துமொழி,பிரிவையும் நெகிழ்வையும் தீங்கை யுமே நினைவூட்டித் துன்பம் தருதல் காணலாம். வேட்கை வளர்த்தல் கதைப் பகுதிகள் சிலவற்றைச் சொல்லாமல் மறைத் துச் சென்று, நாடகம் காண்பவர்க்கு மேன்மேலும் ஆர் வத்தை வளர்த்து, இறுதியில் அவை புலப்படுமாறு செய்தல் உண்டு. இவ்வாறு மறைத்துப் புலப்படுத்தும் முறையால், நாடகம் கவர்ச்சி மிக்கதாக விளங்கும். என்ன நடக்குமோ, என்ன ஆகுமோ என்று அறியும் வேட்கையை" மேன்மேலும் வளர்த்துச் செல்லுதலும் கவர்ச்சி மிக்க முறை யாகும். கதையின் அமைப்பிலேயே இவ்வாறு கவர்ச்சி அமைக்கலாம்; அல்லது கதையின் பகுதிகளை முன்னும் பின்னுமாக மாற்றி அமைக்கும் முறையிலும் கவர்ச்சியை அமைக்கலாம். பலர்க்கும் விருந்து சேக்ஸ்பியரின் வந்த நாடகங்களைக் காண்ப தற்கு மக்கள் பலவகை மனப்பான்மை உடையவர்கள் ; வெவ் வேறு தொழிலைச் சார்ந்தவர்கள் ; வெவ்வேறு வயதும். நோக்கமும் உடையவர்கள். செல்வர், அறிஞர், வீரர், மாலுமிகள், பள்ளி இளைஞர்கள் முதலான பல திறத் தார் வந்து கண்டனர். அவர்கள் அனைவருக்கும் விருந்தாக இருக்குமாறு, அவரவர்க்கு விருப்பமானவற்றை எல்லாம் நாடகத்தில் அமைக்க வேண்டியிருந்தது. படிக்கா தவர்களுக்கு வேண்டிய செயல்களும் கத்தீ சண்டைகளும், நாகரிக மக்களுக்கு வேண்டிய அழகா தொடர்களும். 6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_மரபு.pdf/89&oldid=1682001" இலிருந்து மீள்விக்கப்பட்டது