உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய மரபு.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

88 இலக்கிய மரபு வெறுத்ததும் உண்டு. ஆயினும் நாடகத் துறையில் வெற்றி பெற்றவர் சேக்ஸ்பியரே அல்லாமல், பென் ஜான்சன் அல்லர். ஆகவே, விதிகளை மட்டும் போற்றி நாடகங்களை அமைப்பதால் பயன் இல்லை; சூழ்நிலையையும் கற்பனை செய்து உணர்ந்து, சுவையூட்ட வேண்டும். பயன்படாத மரபுகள் ஒவ்வொரு கலைக்கும் மரபுகள் இருத்தல் போலவே, நாடகக் கலைக்கும் மரபுகள் உண்டு. ஆனால், நாடகம். நுகர்வோர்க்கு அவை மரபுகள் என்று தோன்றாதவகையில் இயல்பாக அமைய வேண்டும். இல்லையேல், நாடகத்தின் கற்பனையில் ஒன்றித் திளைக்க முடியாமல் இடர்ப்பாடு நேரும். ஆதலின் ஒரு காலத்தில் இடர்ப்பாடு இல்லாத மரபாக இருந்த ஒன்று, இக் காலத்தில் இடர்ப்பாடாகத் தோன்றுமானால் அதனை நீக்குதலே நலம். கூட்டமாகச் சேர்ந்து பாடுதலும், பின்பாட்டுப் பாடுதலும் பழங் காலத் தில் நாடகங்களில் இருந்தன. இன்று அவை செயற்கை யாகவும் கற்பனையில் திளைப்பதற்கு இடையூறாகவும் இருத்த லால், அவை நீக்கப்பட்டன. அவ்வாறு காலப் போக்கில் கழித்து விடப்பட்ட மரபுகள் சில உண்டு. அவற்றை இன்று வலியப் புகுத்தி நாடகம் இயற்றுவதில் பயன் இல்லை.* செயல்,ஒருமை (anity of action), கால ஒருமை (unity of time), இட ஒருமை (unity of place) என ஐரோப்பிய நாடகக் The best dramatic conventions are usually those which the audience do not recognise as conventions; which they accept and assume so completely that their participation is immediate. The chorus, for example, is one of the most difficult conventions to establish. in modern drama. Where it is based simply on a lost tradition it has to fight against its own unfamiliarity. -R. Williams, Drama from Ibsen to Eliot, p. 227.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_மரபு.pdf/92&oldid=1681981" இலிருந்து மீள்விக்கப்பட்டது