பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48 வேண்டுமென எதிர்பார்ப்பது பொருத்தமுடையதன்று. மேலும் அவை வடமொழிக் காப்பிய இலக்கணத்தையும் உடன் சேர்த்துக் கூறுகின்றன. காப்பியத்தின் இலக்கணத்தைக் கூறவந்த தண்டியலங்கார ஆசிரியர், பெருங்காப்பிய மென்பது பலவகை உறுப்புக் களை உடையது; வாழ்த்து, வணக்கம், வருபொருள் உரைத் தல் என்பனவற்றுள் ஒன்று அதில் முதலில் வரவேண்டும் அது அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு உறுதிப் பொருட்களையும் பயப்பதாக இருக்க வேண்டும். அதன் பின் தன்னிகரில்லாத் தலைவன், மலை, கடல், நாடு, தலைநகர், பருவம், தண்மதி, செங்கதிர் ஆகியவற்றின் வருணனை, பின் தலைவன் திருமணம், முடி சூடல், தலைவனும் தலைவியும் பொழிலாடல், புனலாடல், மக்களைப் பெறுதல், புலத்தல், கலத்தல் ஆகியவற்றிலே இன்பம் காணுதல், அதன் பின் அமைச்சரோடு சூழ்ந்து ஆராய்தல், துது போக்குதல், போர் செய்தல், வெற்றி பெறுதல், சந்து செய்தல், ஆகியவற்றைச் சருக்கம், இலம்பகம், பரிச்சேதா ஆகிய பல பகுதிகள் மூலம் விளக்கிச் சுவையும், உணர்வும் ஒழுகுமாறு கற்றுவல்ல நல்லோரால் புனையப்படுவது பெருங் காப்பியமாகும்' என்று தெளிவுறக் கூறுகின்றார். காப்பியம் என்ற சொல் தொடர்நிலைச் செய்யுளைக் குறிக்கப் பண்டைய நூல்களில் கையாளப்படவில்லை; பிற்கால நூல்களில் தொடர்நிலைச் செய்யுளைக் குறிக்க அச்சொல் வழங்கப்பட்டுள்ளது. அதே போன்று பிற்கால இலக்கண நூல்களும் தொடர்நிலைச் செய்யுளைக் காப்பியம் எனக் கொண்டன. காப்பியம், தொடர்நிலைச் செய்யுள் இவற்றின் இலக்கணம் பற்றித் தொல்காப்பியம் ஒன்றும் குறிப்பி வில்லை. ஏனெனில் காப்பியம் அதன் காலத்திற்குப் பின்னர் தோன்றியதாகும். காப்பியம் என்பது வடமொழிக் காவி யத்தின் திரிபாகும். வடமொழியில், கவியால் செய்த எந்த நூலும் முதலில் காவியம் எனப்பட்டது. நாடகங்களையும்