பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 61


   "ஆற்றுநர்க் களிப்போர் அறவிலை 
                         பகர்வோர் 
   ஆற்றா மாக்க ளரும் பசி 
                        களைவோர் 
   மேற்றே யுலகின் மெய்நெறி 
                         வாழ்க்கை 
   மண்டினி ஞாலத்து வாழ்வோர்க் 
                         கெல்லாம் 
   உண்டி கொடுத்தோ ருயிர்கொடுத் 
                          தோரே."
   மணிமேகலையின் முழுமுதற் கொள்கை பசிப்பிணியை வேரோடு களைந்து எறிவதே ஆகும்.
   "உருபசியும் ஓவாப் பிணியும் செரு 
                         பகையும் 
    சேராதியல்வது நாடு"

என்ற வள்ளுவரின் கருத்து சாத்தனாரால் அவர் தம் நூலில்,

   "பசியும் பிணியும் பகையும் நீங்கி வசியும் வளனுஞ் சுரக்கென வாழ்த்தி"

என்று வலியுறுத்தப்படுகிறது. இதற்குத் துணையாக அமுத சுரபியின் அறிமுகம் பயன்படுகிறது. மணிமேகலையில் கதைத் தலைவி மணிமேகலைக்கு அடுத்தபடியாக சிறப்பிடம் பெறுவது அமுதசுரபியே யாகும். பரந்தநோக்கோடு உரைப்போமேயானால் மணிமேகலைக் காப்பியத்தின் சிறப்பிற்கு அமுதசுரபியே காரணம் எனலாம். அமுதசுரபி பற்றிய நிகழ்ச்சி கற்பனையே எனினும் அது கருத்தாழம் மிக்க ஒன்று; கவிஞன் கண்ட கனவுலகு. அவ் அமுதசுரபியைக் கொண்டு சிறைக் கோட்டத்தை அறக் கோட்டமாக்கிக் காட்டுகிறார் கவிஞர். அடுத்ததாக மணிமேகலை கூறும் கொள்கை தனக்கென வாழா பிறர்க்குரியாளனாகிய புத்த தேவனின் அருள் மொழிகளின் சிறப்பை எடுத்துக் கூறுவதே. சமயச் சொற்களுக்கெல்லாம் நல்ல தமிழ்ச் சொற்களைப் பெய்து தமிழின் ஆற்றலைப் புலப் படுத்திய பெருமை சாத்தனருக்கு உரியது.

   "பிறந்தோ ருறுவது பெருகிய 
                         துன்பம் 
   பிறவா ருறுவது பெரும்பே ரின்பம் 
   பற்றின் வருவது முன்னது பின்ன 
   தற்ருே குறுவது அறிக"