பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66 மற்றுந் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்க லுற்றார்க் குடம்பு மிகையிவை யுள்வழிப் பற்ரு வினைபாப் பலபல யோனிகள் அற்ரு யுழலு மறுத்தற் கரிதே." இப்பாடலில் முதலிரண்டடிகள் திருக்குறள் அடிகளாகும். இந்நூல் கூறும் கதையை நன்கு நம்மால் அறிய முடியவில்லை. ஆனால் புரட்சிக் கவி பாரதிதாசன் ஒரு சில செய்திகளைக் கருவாகக் கொண்டு திரைப்படத்திற்கு வளையாபதிக் கதையை எழுதித் தந்துள்ளார். இந்நூல் கி. பி. 10-ஆம் நூற்றாண்டிற்கு முன்னர் எழுதப்பட்டது என்பர். குண்டலகேசி குண்டலகேசி என்னும் நூல் பெளத்த சமய நூல்களில் ஒன்றாகும். இன்று இந்நூல் கிடைக்கப் பெறவில்லை; இறந்தொழிந்தது. இந்நூலாசிரியர் நாத குப்தா என்பவர் ஆவார். இந் நூலிற்கு மறுப்பாக எழுதப்பட்ட சமண காவியமாகிய நீலகேசித்தெருட்டு குண்டலகேசிக் கதையினைப் பின் வருமாறு கூறுகிறது. குண்டலகேசி என்பாள் ஒரு வைசிய கன்னிகை: இவள் ஒரு நாள் பிராசாத தலத்து விளையாடுகின்றாளாக, ஒரு வைசிய புத்திரன், காளான் என்பான் பெளத்த தரிசனம் கொண்டு, பல வழியும் சோர விருத்தி பண்ணிக் செல்வானை, அரசன் வதிக்க வென்றேவிச் சிறைப்பட்டுப் போகின்றானை, முன் சொன்ன குண்டலகேசி கண்டு காம பரவசையாக, அதனையறிந்து அவளுடைய பிதா ராஜாவைக் கண்டு யாதானும் ஒர் உபாயத்தால் மீட்டு இவனுக்குக் குண்டலகேசி யென்னும் கன்னியினே விவாக விதியாற் கொடுத்து இனிது செல்கின்ற காலத்து ஒரு நாள் பிரளய கலகத்து நர்மோக்தி முகத்தால் நீ கள்வனன் என்று குண்டலகேசி சொல்லக் காளானும், தன்னுள்ளத்தே சினங் கொண்டு பின்பொருநாள் வித்தியாசாத வியாசத்தால்