பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இக்கால இலக்கியங்களும் 89 லட்சமும் கோடியும் வேண்டாம், அடா!-அதை ரட்சிக்க நம்மாலே ஆகுமோடா! அட்சய பாத்திரம் உண்டே, அடா-நமக்கு ஆரே நிகர் இவ் வுலகில்?-அடா! இவை பிச்சைக் காரர் கொம்மாளம் அடிப்பதைக் காட்டுவன. காலத்துக் கேற்ற உடையணிவோம்-வாசம் கட்டிய சந்தனம் பூசிடுவோம்; கோலமாய்ச் சீவி சினுக்கெடுத்து-மலர் கூந்தலிற் சூடி அழகு செய்வோம் (2) உன்னியெழும் ஊஞ்சல் ஆடிடுவோம்-கேட்போர் உள்ளம் குளிரவே பாடிடுவோம்; சின்னஞ் சிறுவிடு கட்டிடுவோம்-அதில் சித் திர வேலைகள் செய்திடுவோம். (5) பத்துப் பசுக்கள்எம் வீட்டில் உண்டு-நல்ல பாலுக்கு யாதொரு பஞ்சமில்லை; நித்தம் சுகமாக வாழ்ந்திடுவோம்-இந்த நீணிலத் தெம்மையொப் பாரும் உண்டோ?(6) இவை செல்வச் சிறுமியர் களிப்பை நுவல்வது.” நல்ல பண்டங்களைக் கண்டறியோம்;-ஒரு நாளும் வயிறார உண்டறியோம்: அல்லும் பகலும் அலைந்திடுவோம்-பசி ஆற வழியின்றி வாடிடுவோம். (7) 1. தே.வி : மலரும்" மாலையும்-பிச்சைக்காரர் கொம்மாளம்-10,11 2. தே.வி : மலரும் மாலையும் - செல்வமும் சிறுமையும் - -