பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இக்கால இலக்கியங்களும் 91 வேங்கை மரமாகி நின்றாண்டி-வந்த வேடர் தமையெலாம் வென்றாண்டி தீங்குசெய் சூரனைக் கொன்றாண்டி-அந்தத் தீரனைப் பாடி அடியுங்கடி (4) இவை இராமலிங்க அடிகள் அருளியவை. தாழிசை யாப்பில் அமைந்தவை. "பாரதியார் கவிதைகள்' என்ற தொகுப்பிலும் பெண்கள் விடுதலை க கும்மி காணப்பெறுகின்றது. கும்மி யடி!தமிழ் நாடு முழுதும் குலுங்கிடக் கைகொட்டிக் கும்மியடி! நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின நன்மை கண்டோ மென்று கும்மியடி! (1) மாட்டை யடித்து வசக்கித் தொழுவினில் மாட்டும் வழக்கத்தைக் கொண்டு வந்தே விட்டில் எம்மிடம் காட்ட வந்தார்-அதை வெட்டிவிட் டோமென்று கும்.மியடி! (3) நல்ல விலைகொண்டு நாயை விற்பார், அந்த நாயிடம் யோசனை கேட்பதுண்டோ? கொல்லத் துணிவின்றி நம்மையும் அந்நிலை கூட்டிவைத் தார்பழிக் கூட்டிவிட்டார் (4) கற்பு நிலையென்று சொல்ல வந்தார், இரு கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்; வற்புறுத்திப் பெண்ணைக் கட்டிக் கொடுக்கும் வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம் (5) 4. முதல் திரு முறை.50 சண்முகக் கும்மி