பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

: இலக்கிய வகையின் வளர்ச்சியும் இப்போதுள்ள சி.ஐ.டி.நகர் அன்று வெறும் பொட்ட ல க-பாழிடமாக-இருந்தது. அங்கொன்றும் இங் கொன்றுமாக சிறுசிறு வீடுகள் காணப்பெற்றன. வரும் போது தனிமையாக, சிலசமயம் ஒரு சில ஒரு-சாலை மாணாக்கர்களுடன் வருவதுண்டு. பூங்காவில் நல்ல காற்று வாங்கிக்கொண்டு அரட்டை அரங்கமும் நடை பெறுவதுண்டு. இப்பொழுது அந்தக் காலத்தை அசைபோட்டு மகிழ்வதைத் தவிர, தூலமாக அந்தக் காலத்திற்குப் போக முடியுமா, என்ன? அந்தக் காலமும் ஆங்கிலேயருக்கு அடிமைப் பட்டிருந்த காலம். பூங்காப்பகுதியில் சில சமயம் அரசியல் கூட்டங்கள் நடைபெறுவதுண்டு. அவற்றில் நம் அருமை இராஜாஜி, கல்கி ஆசிரியர் இரா-கிருட்டிண மூர்த்தி போன்றவர்கள் பங்கேற்றுப் பேசியதை இன்று நினைவு கூர்கின்றேன். அப்போது அவர் 'ஆனந்த விகடன்", திரு.வி.க.வின் நவசக்தி' போன்ற பருவ இதழ்களில் பணியாற்றியதாக நினைவு. மாணவப் பருவத்தில் நான் கல்கியின் துணிவான பேச்சைக் கேட்டு மகிழ்வதுண்டு. பிற்காலத்தில் அவர் எழுதிய வரலாற்றுப்புதினங் களாகிய சிவகாமியின் சபதம்’ போன்ற நூல்கள் என் கவனத்தைக் கவர்ந்ததுண்டு. அவற்றில் ஆழங்கால் பட்டுப் பயின்றதுமுண்டு. பிற்காலத்தில் அகிலன், தா. பார்த்தசாரதி போன்றவர்களின் வரலாற்றுப் புதினங்களைப் பயின்றதுண்டு. ஆனால் கல்கியின் இயல்பான தமிழ்நடையும், கதைமாந்தர்களும், (எ.டு புத்தபிச்சு, சிவகாமி) கதையின் கட்டுக் கோப்பும் இன்றளவும் என் மனத்தில் நிலை நிறுத்தப் பெற் றுள்ளன. கல்கியைப் போல் வரலாற்றுப் புதினங்கள் பனடப்பதற்கு இன்றளவும் இன்னொருவர் பிறக்க வில்லை என்பதுதான் அடியேனது அதிராத முடிவு. இத்துடன் இது நிற்க,