பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இக்கால இலக்கியங்களும் - 5 ஏழாம் நூற்றாண்டு) சிவபெருமான் எல்லாம் ஆனவன்' என்று பாடும் ஒரிடத்தில், 'ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்" என்று இந்தியாவின் கலைவழிப்பட்ட பாகுபாட்டை இரண்டு இனமாகவே குறிப்பிட்டுள்ளார் என்பதை நாம் அறிவோம். கண்ணுதலப்பனின் தமருகத்தின் ஒரு பக்கத்திலிருந்து பிறந்த ஒலி தமிழ் ஆயிற்று என்றும், அதன் மறுபக்கத்தில் பிறந்த ஒலி வடமொழி ஆயிற்று என்றும் புராணக் கதை ஒன்றும் வழங்கத்தொடங்கியது. சிவபெருமான் வடமொழியைப் பாணினிக்கும் தென் மொழியாகிய தமிழை அகத்தியர்க்கும் கற்றுக் கொடுத்து இருமொழிகளையும் வளரச் செய்தார் என்று வழங்கும் புராணக் கதையின் அடிப்படையும் இதுவே ஆகும். . -- வடமொழி:ளர் தொடர்பு : கி. பி. எட்டாம் நூற்றாண்டிற்குப் பிறகு தமிழர்களுடன் வடமொழி யாளர் தொடர்பு பல நிலைகளில் ஏற்பட்டது; பல காரணங்களாலும் இத்தகைய உறவுகள் நேரிட்டன. வடமொழியிலிருந்து சைனர்கள் சில நூல்களைத் தமிழில் மொழி பெயர்த்தும் தழுவியும் எழுதத் தொடங்கினர். கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரையில் தமிழகம் தமிழரசர்களாகிய சேர சோழ பாண்டியர் களின் ஆட்சியின்கீழ் இருந்தது. பிறகு ஒரு குழப்பம் ஏற்பட்டுக் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு பல்லவர்களின் ஆட்சி தலையெடுத்தது.பல்லவர்களில் சிலர் வடமொழியை நன்கு கற்றவர்கள். பல்லவ அரசன் மகேந்திரவர்மன் , வடமொழியைக் கற்றுத் துறை போகிய வித்தகன், இவன் வடமொழியிலேயே 'மத்தவிலாசம்’ என்ற நாடக நூலை இயற்றியவன்.