பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இக்கால இலக்கியங்களும் 37

     என்பது தொல்காப்பியரின் விதி. எனவே ஒருவர் ஒன்று கூறுவதற்கு மற்றொருவர் மறுமாற்றம் கூறிச் சென்று பின்னர் அவற்றைத் தொகுத்து முடிப்பதோர் சுரிதகமின்றி மூடிதல் உறகலியின் இலக்கணம் என்பது அறிதற்பாலது. இதனைக் கொச்சகக் கலியின் பின் வைத்தமையின் அக்கொச்சக உறுப்பின் ஒப்பன் இதற்கு உறுப்பாகக் கொள்ளப்படும் என்றார் இளம் பூரணர்.

(எ-டு). கலி.149. இது தலைமகளும் தலைவ னும் மாறி மாறிப் பேசுவதையும் பாடலும் சுரிதகமின்றி முடிவதையும் காணலாம். - ஒலிநயமும் யாப்பும் : அச்க் வடிவத்தில் காணும் பாட்டு அரையுயிரோடு தான் உள்ளது. அதைப் பாடிய கவிஞர் இப்பொழுதும் நம்மிடையே இல்லை. அவர் தம் பாட்டில் தம்முடைய முகக்குறிப்பையும், கை யசைவுகளையும், இசையையும் விட்டுச் சென்றிலர். அங்ங்னம் விட்டுச் செல்லவும் இயலாது. ஆனால் ஒலிநயம், கற்பனை, மோனை, எதுகை போன்ற கூறு களை அவற்றின் சாயல்களாக விட்டுச் சென்றுள்ளார். அவருடைய உணர்ச்சியைப் பெற வேண்டும்ானால் அச்சு வடிவத்தில் காணும் அவருடைய சொற்களி லிருந்து மட்டிலும் பெறுதல் இயலாது. அச்சு வடிவத் தில் கானும், பாட்டு ஒளிப்பட நெகட்டிவ் (Photor graphic negative) போன்றது. நெகடிவிலிருந்து படத் திலுள்ளவற்றைத் தெளிவாகக் காண இயலாது. படத்தி லுள்ள பொருள்களின் சாயலே அதிலிருக்கும். தக்க துணைப் பொருள்களைக் கொண்டு அந்த நெகடிவி லிருந்து படத்தை அச்சிட்டால்தான் பொருள்களின் படம் தெளிவாகப் புலனாகும். அங்ங்னமே, கவிதை கவிஞன் தான் விட்டுச் சென்ற சாயல்களிலிருந்து