பக்கம்:இலக்கிய விமர்சனம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகம்

நாடகங்கள் என்று ஒப்புக்கொள்ளத் தடை..யில்லை. இதனால் தமிழில் நாடக வளர்ச்சியே இல்லாமல் போய்விட்டதா என்று கேட்க இடமுண்டு. தமிழிலே நாடகங்கள் நடக் கத்தான். செய்தன. தெருக்கூத்து முதலியலை நடத்து! வருவது இன்றும் நமக்குத் தெரியத்தான் செய்யும். எனினும், காலம், களம் என்ற இலக்கண வரம்புகளைக் கோடு கிழித்துக் காட்டிவிட்டால் மாத்திரம் நாடகம் வந்து விடாது, தொல்காப்பியத்தில் நாடகத்துக்கு இலக்கணம் கூறப்பட்டிருப்பதாக, தமிழ் ஆர்வத்தில் சிலர் சொல்லிக் கொண்டிருக்கலாம். இலக்கணத்தைப்பற்றிக் கவலை இல்லை, இலக்கியம் இருக்கிறதா? இல்லையென்றால், இலக்கணத்தை வைத்துக்கொண்டு, இலக்கியத்தைத் உணர்ந்து கொள்ளலாம் என்பது, பK" அசாஸ்திரத்தைக் கொண்டு, உணவின் ருசியைப் புரிந்துகொள்வது போலத் தான், சிலப்பதிகாரத்தை நாடக இலக்கியம் என்று சொல் கிறார்கள், ஆனால், அதில் தேசியப் பண்புதான் திறைத்து இருக்கிறதே ஒழிய, நாடகப் பண்பு பொங்கி வழியவில்லை. சிலப்பதிகாரத்தை நாடக நூல் என்று சொல்லிக்கொண் டிருப்பதைவிட, தமிழனது தேசிய நூல் என்று சொல்லிக் கொள்வது பொருத்தமா இருக்கும்.

அப்படியானால் நாடகம் என்ற பெயருக்கு இந்நூல்க ளெல்லாம் தகுதியற்றதா என்று கேட்கக் கூட்டும். இந் நூல்கள் ஒவ்வொரு விதத்தில் திருப்தி அளிக்கவும் கூடும். எனினும் நாடகத்தின் பரிபூரணத்துவத்துக்கு இவைகளை உதாரணம் காட்ட முடியாது. இவைகளை வைத்துக் கொண்டு நாம் உலக இலக்கிய வரிசையிலே தலை தாக்கி நிற்க முடியாது, பிரெளனிங் பாடலுக்கோ, ஷெல்லியின் பாடலுக்கோ ஈடாக ஒரு பாரதியின் பாடலை எடுத்துக்

103