பக்கம்:இலக்கிய விமர்சனம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கிய விமர்சனம்

இராம நாடகம், நந்தன் சரித்திரம் முதலியவை கதா காலட் சேபத்துக்குப் பயன்படுகின்றன. குறவஞ்சி பள்ளு முதலியவை, பிரசங்கங்களுக்கும் ரசனைக்குமே பயன்படு கின்றன. அதிலுள்ள நாடகத் தன்மையை யாரும் அனுப் சிப்பதில்லை, பேராசிரியர் கே. சுவாமிநாதன் தமது “கட்டை வண்டி' என்ற நூலின் முன்னுரையில், “ இது வெறும் 487க்ஷன் , பால், வெந்நீர், 'சர்க்கரை எல்லாம் சேர்த் தால்தான் ருசிக்கும். இதைமட்டும் அருந்தினால் கசக்கும்' என்ற கருத்தோடு “ ஆபேரா ' வைப்பற்றிக் குறிப்பிட் டிகுத்தார். மேற்கூறிய தமிழ்

- ஆபேராக்களை ' ரசிக்க வேண்டுமென்றால், பம்பை, ஜெண்டை., உறுமி முதலிய கிராம வாத்தியங்கள், கிராமியப் பண்பு நிறைந்த ஆடை ஓரலங்கார மேடை ஜோடனைகள் முதலியன இருந்தால்தான் காப்பி மாதிரி இருக்க முடியும். வெறும் நூலைப் படிப்ப தென்றல் காப்பிக் கஷாயத்தை சர்க்கரை, பால் முதலியன சேர்க்காமல் அருந்துவது மாதிரிதான்.

மேல் நாட்டில் மற்றெல்லாக் கலைகளையும்விட, நாடகக் கலை அபரிமிதமாய் சிறந்து வளர்ந்திருக்கிறது. உலக நாடக இலக்கிய கர்த்தாக்களில் பிரபலம் படைத்த வர்கள் ஆங்கிலேயர்கள்தான். ரஷ்யாவில் டால்ஸ்டாயும் ஆண்டென்செராவும் , சிறந்த நாடகங்களை எழுதியிருக் கிறர்கள். அதுபோலவே நார்வேயிலிருந்து ஹென்றிக் இய்ஸனும், அயர்லாந்திலிருந்து ஸிஞ்ச், பெர்னார்ட்ஷா, Rள் ஓ' காஸி முதலியவர்களும், ஆங்கில நாட்டிலிருந்து உலக மகாமேதையான ஷேக்ஸ்பியர், ஷெரிடடான் முதலிய ஆசிரியர்களும் தோன்றியிருக்கிறார்கள்.

உலக மகா நாடக ஆசிரியரான ஷேக்ஸ்பியர் மனுஷ உள்ளத்தின் அடிப்படை உணர்ச்சிகளை ஆராய முயலும்

106