பக்கம்:இலக்கிய விமர்சனம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கிய விமர்சனம்

மாதிரியான நாடகங்கள் பெரும் பயன் விளைவித்ததால், பின்னால் ஒரு சிறந்த கலையாகவே வளர்ந்துவிட்டது .

'துன்பியல்' 'இன்பியல்' என்றெல்லாம் பிரித்து வைத்திருந்த ஆங்கிலேயர்களுக்கிடையில், ஒற்றையங்க நாடகம் புது விழிப்பை உண்டாக்கியது. வாழ்வின் ஒரு பகுதியை இது படம் பிடித்துக் காட்டும், பலவித உணர்ச்சி களையும் மோதவிட்டு, கடைசியில் சத்திய வெற்றியையோ, தியாகத்தையோ விளக்கும் பண்டை முறையிலிருந்து விலகிப் பிறந்தன இவை, நாடகம் எங்கோ வாழ்வின் இடை வெளித் தட்டில் ஆரம்பமாகும்; இடைவெளித் தட்டில் முடியும். எனினும் அதற்குள் ஒரு விஷயத்தைச் சொல்லி முடிப்பதாக இருக்கும். நம் நாட்டிலும் இம்மாதிரி ஒற்றைய ங்க நாடக முயற்சிகள் இந்த மறுமலர்ச்சிக் காலத் தில், தோன்றி வருகின்றன. எனினும் குறிப்பிடத்தக்க வெற்றி கிட்டவில்லை. பத்திரிகையின் குறைந்த புக்கங் களில் வெளியிட, சிறு கதை எவ்வளவு பயன்பட்டதோ, அதுபோலவே இந்தக் குட்டி நாடகங்கள் பயன்பட்டன, மேலும், ரேடியோ நிலையத்தில் இந்நாடக முயற்சிகள் பிறந்தன. குறிப்பிட்ட 15 நிமிஷத்திலோ, அரைமணி நேரத்திலோ முடியக்கூடிய நாடகங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியைப் பிரதிபலிக்க முயன்றன. நாடக மேடைச் சௌகரியங்கள், தனிமொழி, திரை, வர்ணஜாலம் இருக்க முடியாது. நடிப்பும் பேசும் பேச்சிலே பாவமாய்த்தான் வெளிவரவேண்டும். இந்நாடகங்கள் சொல்லையே பிரதான மாகக் கொண்டவை,

ஒற்றையரங்க நாடகங்களையும், முழுநேர நாடகங்களை யும் தமிழில் இன்று உண்டாக்கத்தான் செய்கிறார் கள். எனினும் வெற்றி இல்லை, 'மாரியம்மன் திருவிழா

11)