பக்கம்:இலக்கிய விமர்சனம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞன் ஒரு குடிகாரன்

ருக்கும் கவிதை கவலை தீர்க்கும் கள்ளாகப் பயன்ப.-- வில்லை. உவகையின் வெறியிலே கவிதை பிறக்கலாம். கவலையின் உச்சத்திலேயும் கவிதை பிறக்கலாம். இரண்டு மற்ற ஒரு போதை நிலையிலும் கவிதை பிறக்கலாம், இந்தப் போதை முறையில், கவிதை கவிஞனுக்குப் புகலிடமாய் விடுகிறது.

கவிதை என்பது. கவிஞனின் ஆத்ம உணர்ச்சிகளின் மொழி பெயர்ப்பு என்று கருதுகிருேம், அதே கவிதை கவிஞனுக்குக் கவலையை மறக்கும் கஞ்சாவாக, மயக்க மருந்தாகவும் உபயோகப்படுகிறது,

மேற்கூறிய கருத்து அனைத்தையும் தூல வடி. லிலே 1.ரிந்துகொள்ள நமது கவி பாரதியாரையே உதாரணம் காட்டலாம், பாரதியாரின் பல் கவிதைகள் அவருக்குக் கவலையை மறக்கச் செய்யும் போதைப் பொருளாகவே பயன்பட்டிருக்கின்றன. பாரதி கவிஞரானாலும், அவரும் உப்புக்கும் புளிக்கும் கவலைப்படக்கூடிய மனிதர்தானோ !

வாழ்க்கையில் சுகத்தை விரும்பி ஏங்கியவர் அவர். அந்தச் சுகத்தை அடைய முடியாத ஆசைகளின் எதி ரொலிகளாகத்தாள் அ வ ரு டை ய பல கவிதைகளும் எழுந்தன. இயற்கையை மாயை என்று அஞ்சிய கூட்டத் தைச் சேர்ந்தவரல்லர் பாரதி, '1' உருஞ் சதமல்ல, உற்றார் சதமல்ல ” என்று வறட்டு வேதாந்தம் கற்றவ ரல்லர் பாரதி. * செத்தபிறகு சிவலோகம் வைகுந்தம் ' என்று சொல்பவருக்கு ஈமச் சங்கு எடுத்து ஊதியவர். மக்களும் மனைவியும் மனிதனை ஒண்டவந்த பிடாரிகளல்ல, அவனுக்கு ஊக்கமளிக்கும் தெய்வச் சிற்பங்கள் என்று உணர்ந்தவர், சிலை போல நிற்கும் மனைவியும் பிள்ளைக்

51