பக்கம்:இலக்கிய விமர்சனம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞன் ஒரு குடிகாரன்

அவருடைய மனத்துயரையே அவரால் தாங்க முடியா திருந்தது.

  • * நாட்டு மக்கள் நலமுற்று வாழவும், நானிலத்தவர் மே நிலை எய்தவும், பாட்டிலே தனி இன்பத்தை நாட்டலம், பண்ணிலே களிகூட்டவும், வேண்டி தான் மூட்டுமன்புக் கனலொடு வrனரியை முன்னுகின்ற பொழுதிலெலாம், குரல் காட்டியன்னை பராசக்தி ஏழையேன்'

கவிதையாவுந் தனக்கெனக் கேட்கின்றாள், என்று பாடி யதின் காரணம் உலகத்துச் சிக்கலிலே சிக்கிக் கிடந்த பாரதியின், தம்மைச் சமாளிக்க முடியாத நிலைமையும் பிறரின் மீதுள்ள அனுதாபமுமேயாகும்,

பாரதி யாரைப்பற்றி இன்று பல விஷயங்கள் வரு கின்றன. அவர் ** மக்களுக்காகப் பாடினார். முப்பத்து முக்கோடி ஜனங்களின் நன்மைக்காக தனது வாழ்வையே அற்பணம் செய்தார் என்றெல்லாம் விமர்சனங்களும் செய்திகளும் வருகின்றன. ஆனால்... இத்தனைக்கும் மேலே அவர் தம்மை மறந்து உலகத்தை மறந்து, கவிதையைக் கஞ்சாவாக, போதைப் பொருளாகவும் கொண்டிருந்தரர் என்பதற்கு மேற்கூறிய விரிவான விமர்சனமே போதும். நம் நாட்டுக் கவிதைகள் பலவுமே இம்மாதிரியான கஞ்சா வாகவே இருந்து வந்திருக்கின்றன. கடவுள்மீது பாடினாலும் காதல்மீது பாடினாலும் நம் கவிதைகள் பல கஞ்சாக் கவிதைகள். நமது புலவர்களும் கவிதையைப் புகலிடமாகக் கொள்ளும் (Escapism) வழியில் தான் சென்று விட்டார்கள். காரணம் நமது புலவர்களுக்கு ஈனக் கவலைகள் அதிகம். அந்தக் கவலையை (மறப்பதற்குக் கடவுளோ, கள்ளோ ,

55