பக்கம்:இலக்கிய விமர்சனம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறு கதை .

தாலும், இலக்கியம் என்று வந்துவிட்டால். அதற்கு ஒரு வரம்பு கிழித்துக்கொள்வது நல்லது. இந்த வரம்பு கருத் தைப் பொறுத்ததல்ல: உருவத்தைப் பொறுத்ததுதான் என்பதை மறந்துவிடக் டடாது. எந்தக் கதைக்கும் ஒரு ஆரம்பம், இடையிலே சம்பவங்கள், அல்லது மனோ தர்மத்தினால் ஏற்பட்ட பின்னல், ஆரோகண அவரோகண கதிகள், முடிவு முதலியவற்றை ஆசிரியன் இஷ்டம்போல் கையாண்டு ஒரு பூர்ண உருவம் கொடுக்கவேண்டும் என்பதே என் கருத்து. * சில கதைகளுக்கு ஆரம்பமும் முடிவுமே வேண்டியதில்லை. அந்த இரண்டுக்கும் இடையிலே ஒரு இழையை உருவிக் காட்டலாம்' என்று சிலர் கருதுகிறார்கள். அப்படிக் காட்டுவது கஷ்டமான காரியம். அப்படிக் காட்டும்போது கதையின் ஜீவன் பிரிந்துவிடக் கூடாது. "அறுபட்டு விழுந்த பல்லியின் வானில் இருக்கும் ஜீவனைப்போல், அந்தத் பகுதியிலும் உயிர் இருக்கவேண்டும். மேலும், அப்படி உருவிக் காட்டுவதி லேயும், நாம் ஆரம்ப-முடிவு காண முடியும். உதவ அமைப்பு அமையாவிடில், கதை தலையும், வாலும் அற்து சவமாய்க்கிடக்கும் பாம்பின் சதைப் பிண்டம் போலவே இருக்கும். ஆனால், இந்த உருவ விவகாரம் இன்னமாதிரி தான் இருக்கவேண்டும் என்று எவரும் கூற முடியாது. உருவ அமைப்பு ஆசிரியனின் கற்பனைக்குள் அடங்கியது. அதில் தலையிடக் கூடாது ,

இந்த நான்கையும் உணர்ந்து கொள்ளும் சக்தியும், ஆசிரியனுக்குச் சமூகத்தை, வாழ்க்கையைச் சரியான திருஷ்டியுடன் பார்த்துக் கிரகிக்கும் தன்மையும், அதை வெளிக்கொணரும் சிருஷ்டி. சக்தியும் இருந்துவிட்டால் சிறந்த கதாசிரியனாக வெற்றியடைய வழியண்டு,

35

-