உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலங்கைத் தமிழா இது கேளாய்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99 டிக்கத் தவறமாட்டார்கள் என்பதை அரசுக்கு அறிவுறுத்த நான் கடமைப்பட்டுள்ளேன். அராஜகம் நீடிக்க முடியாது ஆணவ ஆட்சி நிலைக்காது-என்பதை ஆட்சியாளர் நினைவிற் கொள்வார்களாாக. தியாகத் தீயால் என் உள்ளத்தைக் கருக்கிடாதீர் சிறையிலிருந்து கலைஞர் வேண்டுகோள் கழகத் தலைவர் கலைஞர் அவர்களை நான் சிறையில் சந் தித்தபோது தம்முடைய விடுதலையைக் கோரி உடன்பிறப் புக்கள் பலர் தங்களைத் தாங்களே தீயிட்டுப் பொசுக்கிக் கொள்ளும் துயரச் செய்தி நாள் தோறும் வருவதைக் கேட்டு மிகவும் வருந்தினார். தனது விடுதலை கோரி இதுவரை நான்கு ஐந்து பேர் தீக்குளித்து மாண்டதைத் தன்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்று தழுதழுத்த குரலில் கூறினார். அன்பு பாசம் எனும் தென்றலாக விளங்கிடும் எனது உடன்பிறப்புகள் தீக்குளித்து அவர்களது தியாகத் தீயால் என் உள்ளத்தை கருக்கிட வேண்டாமென்று கேட்டுக் கொள்வதாக வேண்டு கோள் விடுத்துள்ளார். தியாக தீபங்களாக மாறிவிட்ட பிருந்தாவன் மனோகரன், கிட்டு, முத்துப்பாண்டியன் ஆகியோரின் குடும் பத்தாருக்கு தனது இதயமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார். கலைஞரின் உள்ள முருக்கும் வேண்டுகோளை உணர்ந்து இனியேனும் எவரும் இப்படிப்பட்ட துக்கம் விளைவிக்கும் தியாகத்தில் ஈடுபட வேண்டாமென வேண்டிக் கொள் கிறேன். க.அன்பழகன் 25.9.81 பொதுச் செயலாளர், தி.மு.க