உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலங்கைத் தமிழா இது கேளாய்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 இப்போதும் “சிலது”களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை! எனக்காக, இந்த எளியோனுக்காக, சாதாரணமானவனுக்காசு, சாமான்யனுக்காக, மிக உயர்ந்த வகுப்பில் தோன்றாமல் மிக மிகப் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் தோன்றியவனுக்காக, அன்பையும் பாசத்தையும் அள்ளிப்பொழிந்து உயிரையே தருவதற்கு முனைந்துவிட்ட உடன் பிறப்புக்களின் செயல், அந்தச் ‘சிலது'களின் எரிச்சலை அதிகப்படுத்தியுள்ளது! எழில்மிகு ரோஜாவை எருக்கம்பூ என்று சொல்லி விடுவதாலேயே ரோஜாவின் மணமும் மதிப்பும் குறைந்து விடுவதில்லையென்று நான் இன்னமும் அன்பு கொண்டிருக் கிற ஒருவர் அடிக்கடி சொல்வார்! அதை எண்ணிக் கொள்கிறேன்- ஆயிரங்கோடி சூரியப் பிரகாசம் கொண்ட சுடர்விளக்குகளாக ஒளி விடும் தியாகப் பிழம்புகளே! உங்களை எவரும் எதைச் சொல்லியும் கறை படுத்திவிட முடியாது! ஆனால் நீங்கள் தேவையில்லாத ஒரு தியாகத்தைச் செய்து--நமது இலட்சியப் படையின் மிகத்தேவையான போர்க்கலன்களை இழந்து நிற்கும் நிலைக்கு எங்களை யெல்லாம் ஆளாக்கி விட்டீர்களே என்பதை நினைத்திடும் போதுதான் எங்கள் நெஞ்சில் நீங்கள் மூட்டிக் கொண்ட நெருப்பின் ஜுவாலை வீசி எங்களைத் தகிக்கச் செய்கிறது தவிக்கச் செய்கிறது! இதைச் சொல்லிச் சொல்லித் துக்கத்தைப் பகிர்ந்து கொள்ளத்தான் உடன்பி றப்பே, உன்னை நோக்கி இத்திங்கள் எட்டாம்நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறேன். அன்புள்ள மு. க. (5-10-81 அன்று முரசொலியில் வெளியான கலைஞர் கடிதம்.)