உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலங்கைத் தமிழா இது கேளாய்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 காப்பாற்ற உடனடி உதவி தேவை. இப்பிரச்சினையில் தலையிட்டு விரைந்து ஆவன செய்யும்படி வேண்டுகிறேன், இவ்வாறு பிரதமருக்கும், வெளியுறவு அமைச்சருக்கும் அனுப்பிய தந்தியில் தலைவர் கலைஞர் குறிப்பிட்டிருக்கிறார். (கலைஞர் 18,8·81 அன்று பிரதமருக்கு அனுப்பிய தந்தி) அந்த திசையை நோக்குகிறார்கள் ஐந்துகோடித் தமிழர்கள் உடன் பிறப்பே, கண்ணீர் வடிக்கிறோம்- கவலை தெரிவிக்கிறோம்- கண்டனக் குரல் கொடுக்கிறோம்- இலங்கையில் வதைபடும் தமிழர்களுக்காக இங்குள்ள நாம் அதைத்தான் செய்கிறோம்! அதைத் தான்- செய்ய முடிகிறது! இலங்கையில் வதைபடும் தமிழர்கள் எனப் பொதுவாகத்தான் குறிப்பிட்டிருக்கிறேன். இந்தியத் தமிழர்களானாலும் இலங்கையில் தமிழ் ஈழம் கோருகிற தமிழர்களானாலும் மலைத்தோட்டத் தமிழர்களானாலும் நமது நோக்கில் தமிழக்குலம்தானே! அந்தத் தமிழ்க்குலம் அங்கே படும்பாடு - பஞ்சுதான் படுமோ என்றல்லவா எண்ணி எண்ணி வேதனைத் தணலில் விழுந்து துடிக்கிறோம். இன்று-நேற்றா? எத்தனை ஆண்டுகளாக இந்தக் கொடு மையின் கோர நர்த்தனம் இலங்கை மண்ணில் நடைபெற் றுக் கொண்டிருக்கிறது! மானமொன்றே நல்வாழ்வெனக் கொண்டு வாழ்ந்திடும் தமிழ் மங்கையரின் கற்புக்குக் களங்கம் விளைவிக்கும் செயல் கண்டும், தமிழர்களின் உயிர்களும் உடைமைகளும் கொள்ளை போவதைக் கண்டும் - அண்ணா காலத்திலிருந்தே, தி. மு