உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலங்கைத் தமிழா இது கேளாய்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 பிரச்சினையை அணுகிட வேண்டும் என்பதுதான் மிக முக்கிய மானதும்—அவசரமானதும் -அவசியமானதுமான நம் முடைய வேண்டுகோள். கடந்த சில நாட்களுக்கு முன்புதான் ஒரு பெரும் கலவரம் யாழ்ப்பாணம் பகுதியில் நடைபெற்று தமிழர்கள் அவதிக்கு ஆளானார்கள். தமிழர்களுடைய பொருட் களெல்லாம், கோவில்களெல்லாம் தீக்கிரையாக்கப்பட்டன . தமிழர்களின் பத்திரிகை அலுவலகங்களெல்லாம் சூறையா டப்பட்டன. தமிழர்களுடைய நீண்ட நெடுங்காலமாக பாதுகாத்து வருகிற தொன்மை நூல்களெல்லாம் நிறைந்த ஏறத்தாழ இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள இலங்கையிலே மிகப் பெரிய நூல்நிலையம் சாம்பல் ஆக்கப்பட்டு ஒரு நூலினுடைய ஒரு பக்கத்தை ஒரு ஏட்டை கூட திரும்பி பெற முடியாத அளவிற்கு கருகிவிட்ட செய்தியை நாம். கேள்விப்படு கிறோம். அது மாத்திரமல்ல அமெரிக்கா செல்கிற வழியில் எங்களைச் சந்தித்த ஈழத்தமிழர்களின் தலைவர் அமிர்த லிங்கம் அவர்களும் அந்தச் சோக சம்பவங்களையெல்லாம் எங்களிடம் விவரித்துச் சொன்னார். இந்தக் கொடுமைகளை யெல்லாம் இந்திராகாந்தி அவர்களிடம் முதலமைச்சர் அவர்களும் எடுத்துக் கூறியிருக்கிறார். நான் பிர தமர் அவர்களை சந்தித்துப் பேசியநேரத்திலும் இவற்றை எடுத்துச் சொல்லியிருக்கிறேன். நம்முடைய தமிழர்களுக்காக எடுத்து வைத்த கோரிக்கை களை ஆழ்ந்து கவனித்து இந்தியப் பிரதமர் அவர்களும் தக்க ஏற்பாடுகளை நிச்சயமாக இந்தியப்பேரரசு கவனிக்கும் என்ற உறுதி மொழியை எனக்கு அளித்திருக்கிறார்கள். அதைப்போல முதலமைச்சருக்கு அனுப்பியிருக்கிற செய்திகளையும் ஏடுகளில் பார்த்து மன ஆறுதல் பெற்றுள் ளேன். நமது ஆதரவு என்றும் உண்டு இந்திய வெளி விவகாரத்துறை அமைச்சரிடமும் இது பற்றி எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது.