உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலங்கைத் தமிழா இது கேளாய்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31 ஊர்வலத்துக்கும் தடை விதிப்பது முறைதானா? என்று கேட்டார்கள். இந்தப்பிரச்சினையில் நாமெல்லோரும் ஒன்று பட்டு இங்கே பேசுகின்ற வாய்ப்பு இருக்கிறபோது நீங்கள் மட்டும் தனியே ஊர்வலம் போவது முறைதானா? நீங்கள் ஏன் உங்களைத் தனியாகப் பிரித்துக் கொள்கிறீர்கள்? ஊர்வலம், அடையாள மறியல் என்ற செய்தி ஓரிரு தினங் களுக்கு முன்னால்தான் காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டது. சட்டசபை நடக்கிறபோது பிரதான எதிர்க்கட்சி என்ற முறையில் பிரச்சினைகளை எழுப்புகிற முழுஉரிமையை நீங்கள் பெற்றிருக்கிறபோது, வெளியே ஓரு ஊர்வலம்தேவைதானா? மற்றவர்கள் சட்டசபைக்கு வரமுடியாத கட்சியினர் செய்யலாம். கைது பற்றி குறிப்பிட்டார்கள்-எந்த ஊர்வலத்திலும் அதுவும் குறிப்பாக மறியல் என்று சொல்கிற போது— அரசாங்கத்திற்குக் கிடைத்த தகவல் அது தொடர்ந்து நடத்தப் போவதாக தகவல் கிடைத்தது. ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் அடையாள மறியல் என்று சொன்னார்கள். இப்படி தனித்து நின்று பிரச்சினைகளைக் கிளப்புகிற போது, அதில் சமூக விரோத சக்திகளும் சேர்ந்து எந்த அசம்பாவிதத்தையும் செய்துவிடக் கூடாது என்பதற் காகத்தான் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறதே. தவிர வேறல்ல. உண்மையை சொல்லவேண்டுமானால் இலங்கைக்கு சென்று இறந்துவிட்ட தனபதி- எங்களுடைய சொந்தப் என்று கேட்க பிணம் ; நாங்களேசுேம்மா இருக்கிறபோது நீங்கள் ஏன் இப்படி ஆர்ப்பாட்டம் நடத்துகிறீர்கள் விரும்புகிறேன். கலைஞர் எதிர்க் கட்சித் தலைவர் கலைஞர்:- தலைவரவர்களேசு அமைச்சர் அவர்கள் சில விளக்கங்களைத் தந்த பிறகு நானும் அதற்கு பதிலளிக்கக் கடமைப் பட்டிருக்கிறேன். சட்டமன்றம் கூடுவதற்கு முன்பே நம்முடைய அருமை நண்பர் நெடுமாறன் அவர்கள் என்னைச் சந்தித்து, தான் ஒரு தனி நபர் தீர்மானம் இலங்கையைப் பற்றித் தரப் போவ தாகவும், அதற்கு தி.மு.கழகம் தன்னுடைய ஆதரவைத் தரவேண்டுமென்றும் நல்ல எண்ணத்தோடு அணுகிக் கேட் டார். அப்போதுநான் அவரிடம் இப்படி ஒவ்வொரு கட்சியும்.