உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலங்கைத் தமிழா இது கேளாய்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 என்.வி. என். சோமு எம்.எல்.ஏ.புருடோத்தமன் எம்.எல்.ஏ மாணவர் அணிச்செயலாளர் ஆர். கணேசன், சென்னை மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் அனுசூயா ஆகியோர் முன்னிலையிலும் அண்ணா சிலையிலிருந்து புறப்பட்டு இலங்கைத் தூதரகத்தின் முன்பு ஒரு நாள் அடையாள மறியல்செய்வதென முடிவெடுத்து அறிவிக்கப்பட்டது. மறியலில் ஈடுபடுபவர்களைக் கைது செய்வது சட்டப்படி முறையானது என்ற போதிலும், மறியலுக்காக ஊர்வலம் செல்வதே கூடாது என எம்.ஜி.ஆர், ஆட்சி தடைவிதித்து, முன் கூட்டியே சென்னை மாவட்டக் கழகப் பகுதிச் செய லாளர்கள், வட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட சுமார் ன்னூறு தோழர்களை முதல்நாள் நள்ளிரவே கைது செய்து. இன்று மாலை அவர்களை விடுவித்திருக்கிறது. பத்து மகளிர் உட்பட 150 பேர் சிறையேகினர்! 29.8.81இல் சீதாபதி எம். எல். சி. தலைமையில் ஊர் வலம் செல்ல முனைந்தவர்களில் சுமார் நூற்றி ஐம்பது பேரை (பத்து தாய்மார்கள் உட்பட) கைது செய்து ரிமாண்டு பெற்று மத்திய சிறைச்சாலையில் அடைத் துள்ளனர். ஒருநாள் அடையாள மறியல்—அதுவும் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக என்று தெளிவாக முன்கூட்டி அறி வித்து அமைதியான முறையில் கண்டனத்தைத் தெரிவிக்க முனைந்த கழகத்தினரை கைது செய்து பதினைந்து நாள் ரிமாண்டு வழக்கு-விசாரணை-அதற்கான சட்டப் பிரிவு கள் பிரயோகம் என்ற அளவுக்கு எம். ஜி. ஆர் அரசு பழி வாங்கும் எண்ணத்துடன் அடக்கு முறையைக் கட்ட வீழ்த்து விட்டிருக்கிறது. இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குக் கண்டனக் குரல் எழுப்பும் கடமையுடன், எம். ஜி. ஆர். அரசின் இந்தப் பழிவாங்கும் போக்கிற்கும் எதிர்ப்பைத் தெரிவிக்கவேண்டிய தவிர்க்க முடியாத நிலைமை தி. மு. சுழகத்திற்கு ஏற்பட்டி ருக்கிறது. இது குறித்து என்ன நடவடிக்கையைத் தொடர்ந்து மேற்கொள்வது என்பது பற்றித் தலைமைக் சழகம் முடிவு செய்து இரண்டொரு நாட்களில் அறிவிக்கும்.