உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலங்கைத் தமிழா இது கேளாய்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமைதியாகத் தொடரட்டும் அறப்போர்! உடன்பிறப்பே, இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக தமிழகத்தில் ஆளுங் கட்சியும் இணைந்து நடத்தும் முழுஅடைப்பு(அர்த்தால்) இத் திங்கள் எட்டாம் நாள் நடைபெறுமென்று நாள் குறிக்கப் பட்டதை ஆகஸ்டு 31-ம் நாள் மாலையிலேயே பம்பாயில் இருந்த நான் அறிந்து கொண்டு, அன்று பம்பாய் சண்முகா னந்தா அரங்கில் நடைபெற்ற தமிழ்ப் பேரவை ஆண்டு விழாவில் தமிழக ஆட்சியாளருக்குப் பாராட்டு தெரிவித்துப் பேசியிருக்கிறேன். இலங்கையில் கொடுமைக்கு ஆளாக்கப்படும் தமிழர் களைக் காப்பதற்கு தமிழ் நாட்டில் உள்ள எல்லாக் கட்சி களும் தனித் தனியாகக் குரல் எழுப்பிடுவதும் ஒன்றுபட்டு “அர்த்தால்” நடத்திடுவது இலங்கைத் தமிழர்களுக்குப் புதிய வலிவை வழங்குவதோடு ஆறுதலையும் அளிக்கும் என்பதில் ஐயமில்லை. கடந்த கால நிகழ்ச்சிகளை - கட்சிமாச்சரியங்களை- இலங்கைப் பிரச்சினைக்காக மறந்து விட்டு இங்குள்ள தமிழர் கள் ஒன்றாக அணிவகுத்திடும் நேரத்தில் நாம் கொண்டுள்ள மகிழ்ச்சியும் எழுச்சியும் ஒருகணம் மறைந்திடும் விதத்தில் தமிழக ஆட்சியாளர்கள் நடந்து கொள்வதைச் சுட்டிக் காட்டாமல் இருக்க முடியவில்லை! சென்னைப் பல்கலைக்கழகத்திற்கும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திற்கும் செனட் உறுப்பினர்களின் பதவிக்கால வரம்பு கட்டப்படும் சட்டம் கொண்டு வரப்படாமல் நமது நண்பர் பி.டி.ஆர். பழனிவேல்ராசன் அவர்களை மனதில் வைத்து மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்திற்கு மட்டும் சட்டம் கொண்டுவரப்பட்டதைப் போலத்தான்-இலங்கைப் பிரச்சினைக்காக தூதுவரகத்தின் முன்னே ஆர்ப்பாட்டம் செய்த கட்சிகள், உண்ணாவிரதம் இருந்த கட்சிகள், அமைப் புகள், ஆகியவற்றின் மீது மேற்கொள்ளாத நடவடிக்கைகளை இந்த அரசு, தி.மு.கழகத்தினர் மீது மட்டும் மேற்கொண்டு முன் கூட்டியே கைது, கைது செய்யப்பட்டவர்களில் பத்து மகளிர் உட்பட நூற்றி ஐம்பத்திஏழு பேர் மீது ரிமாண்டு, மத்தியசிறைச்சாலையில் அடைத்தல், பல பிரிவுகளில் வழக்கு கள், என்று அறிவித்து செயல் படுகிறது!