உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலங்கைத் தமிழா இது கேளாய்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பள்ளிக்குப் போன பிள்ளை திரும்பிவரவில்லை என்றால் தாயே பிள்ளையைத் தேடிப் போவது போல் சீத்தாபதியும் மற்றவர்களும் சிறையிலிருந்து திரும்பி வராவிட்டால் நானும் அவர்கள் இருக்கும் இடம் செல்வேன்! நான் சுற்றுப் பயணம் மேற்கொண்டு சென்னை இரயிலில் ஏறுகிற நேரத்தில் சென்னை மாவட்டக்கழகத் தின் செயலாளர் ஆர்.டி. சீத்தாபதி இந்தத் திருமணத் திற்கான தேதியை என்னிடம் உறுதி செய்து அய்யாச் சாமிக்கு அறிவித்தார். அவர் உறுதி செய்து கொடுத்த காரணத்தாலோ என்னவோ நன்றி மறவாமல் இந்தத் திருமண அழைப் பிதழில் மணமக்கண் ஆர். டி. சீத்தாபதி வாழ்த்துவார் என்று அச்சிடப்பட்டிருக்கிறது. ஆனால் நண்பர் எம். ஜி. ஆர். அவர்களின் கருணையின் காரணமாக சீத்தாபதி தூத்துக்குடி வருகிறார். அவரை அலையவிடக் கூடாது என்பதற்காக நண்பர் எம். ஜி. ஆர். கடந்த ஐந்து நாட்களாக சென்னை சிறைச்சாலையிலே அரசாங்க விருந்தினராக வைத்திருக்கிறார். சீத்தாபதி வேறு எந்தக் குற்றமும் செய்து விட்டு சென்னை சிறைச்சாலையிலே அடைப்பட்டிருக்க வில்லை.. சீத்தாபதி செய்த ஒரே ஒரு குற்றம் இலங்கையிலே வாழ்கிற தமிழர்களுடைய இரத்தமும், இந்தத் தமிழகத்திலே வாழ் கிற தமிழர்களுடைய இரத்தமும் ஒரே இரத்தம் தான் என்று சொன்னார். அந்தக் குற்றத்தை என்னுடைய ஆட்சி யிலே செய்யலாமா? என்று கேட்டு நண்பர் எம். ஜி. ஆர். அவர்கள் சீத்தாபதியையும் அவரோடு 150-க்கும் மேற் பட்ட தோழர்களையும் மகளிர் அணியைச் சார்ந்த 10 பேர்