உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலங்கைத் தமிழா இது கேளாய்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 எல்லா பக்தர்களும் ஒன்று கூடி இசை விழா முதலிய வைகள் எல்லாம் நடைபெறுகின்றன. ஊரிலுள்ள பக்தர் களெல்லாம் கோவிலுக்குச் செல்வர்! பிள்ளையார் கோவி லுக்கு விழா நடத்துகிறார்கள்! அதற்காக தனித்தனியாக வீட்டில் களிமண் பிள்ளை யாரை வாங்கி வைத்து—அந்தப் பிள்ளையாரையும் பூஜிக் கின்ற வழக்கம் உண்டா? இல்லையா? பிள்ளையாரை வைத்துக் கொண்டாடுகின்ற பக்தர்களை தான் நான் கேட்கிறேன்? அப்படி உண்டல்லவா? அதைப் போலத்தான் எல்லோரும் சேர்ந்து பிள்ளை யார் கோயிலிலே விழா நடத்துவதைப் போல-இலங்கைப் பிரச்சினைக்கு அர்த்தால் நடத்துகிறோம்! கோவிலிலே விழா நடந்தாலும் கூட-வீட்டிற்குள்ளே பிள்ளையாருக்குப் படைக்க பிள்ளையார் உருவத்தை வைத்து வணங்குவதைப் போல, நாங்கள் இலங்கைத் தூதுவரகத் தின் வாசலில் மறியல் நடத்துகிறோம்! இது எப்படித் தவறாகும். “கோவில் விழா நடக்கும் நடக்கும் போது உன்னுடைய வீட்டிலே பிள்ளையார் எதற்கு? எதற்கு?” என்று எம். ஜி. ஆர். சொல்கிறார். இதற்குப் பக்தர்கள் தான் பதில் சொல்ல வேண்டும்! இலங்கைப் பிரச்சினைக்காக ஒரு அர்த்தால் என்றால், அது எல்லாக் கட்சிகளும் சேர்ந்து நடத்துகின்ற நிகழ்ச்சி! அதற்கிடையே ஒவ்வொரு கட்சியும் இலங்கைத் தூதுவர கத்திற்கு முன்பு போராட்டம் நடத்த -ஆர்ப்பாட்டம் நடத்த-அணி வகுப்பு நடத்த-கண்டனக் குரல் எழுப்ப உரிமை படைத்தவை! ஆனால் எம். ஜி. ஆர். காட்டிய தாமதத்தின் காரண மாகவும், இலங்கையிலிருந்து வந்த செய்திகளின் காரண மாகவும் நெஞ்சு துடிக்கின்ற மாவட்டச் செயலாளர் சீத்தாபதி தலைமையில், என். வி. என். சோமு எம். எல். ஏ., து. புருசோத்தமன் எம். எல். ஏ. ஆகியோரும் மற்றும் 150 பேரும் 10 பெண் மணிகளும் இலங்கைத் தூதுவரகத் தின் மூன்னால் மறியல் செய்வார்கள் என்று அறிவிக்க வேண்டிய தவிர்க்க முடியாத நிலை எங்களுக்கு ஏற்பட்டது. அப்படி என்ன நெஞ்சைக் குலுக்குகின்ற செய்தி!