உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலங்கைத் தமிழா இது கேளாய்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83 டத்திலேயே பூத்து, போராட்டத்திலேயே போராட்டத்திலேயே கனிந்து, வளர்ந்து-போராட்டம் என்றால் புறமுதுகுகாட்டாமல் - பின்னடையாமல்-ஓரம் போகாமல்- புதர் எங்கே என்று பதுங்காமல் தமிழினத்தை வளர்த்து கொண்டுள்ள ஒருகட்சி திராவிட முன்னேற்றக் கழகம். எங்களுடைய ஆசான் பெரியாரானாலும் அந்தப் பெரி யாரைத் தலைவராக் ஏற்றுக் கொண்ட எங்கள் தலைவர் பேரறிஞர் அண்ணாவானாலும் அவர்கள் காணாத களங்களா எங்களுக்கே எண்ணிக்கை மறந்து போய் விட்டது. எத் தனை முறை சிறைச்சாலைக்குச் சென்றோம் என்று அந்த அள விற்கு நாங்கள் சிறைச்சாலைக்கு சென்றிருக்கிறோம். தமிழ கத்திலே உள்ள எந்த சிறைச்சாலையும் பாக்கி இல்லை என் கின்ற அளவிற்கு நாங்கள் அடைபட்டுக் கிடந்திருக்கி றோம். நண்பர் ஆலந்தூர் பாரதி இங்கே எடுத்துக்காட்டியதைப் போல் 14-வது வயதில் திருவாரூர் தெருவீதிகளில், பள்ளிக் கூடத்து மாணவனாக இருந்த கருணாநிதிதான் கையிலே தமிழ்க் கொடி ஏந்தி,ஓடிவந்த இந்திப் பெண்ணே கேள்! நீ தேடி வந்த கோழையுள்ள நாடிதல்லவே என்று இந்தி எதிர்ப்புப் பாடலை முழங்கி பொது வாழ்க்கையிலே அடி யெடுத்து வைத்தவன் என்பதை எம். ஜி, ஆர். அவர்கள் மறந்திருக்கக் கூடும். து ம் திருமணநாள் செப்டம்பர் 15-ஆம் தேதி என்று நாஞ்சி லார் குறிப்பிட்டார். அந்தத் திருமணம் நடைபெற்ற நாளி லேயே மணப்பெண்ணை மணவறையிலே உடகார வைத்து விட்டு தெருவிலே சென்ற இந்தி எதிர்ப்பு ஊர்வலத்திலே கலந்து கொண்டு விட்டு பள்ளிக்கூடத்திற்கு எதிரே நடை பெற்ற அடையாள மறியலிலே கலந்து கொண்ட கருணாநிதி தான் நாளை மறுநாள் செப்டம்பர் 15-ம் தேதி இந்தப் போராட்டத்திலும் கலந்து கொள்ள இருக்கிறான். ஏதோ திராவிட முன்னேற்றக் கழகத்திலே இருக்கிற நானோ, பொதுச் செயலாளரோ, பொருளாளரோ, துணைப் பொதுச் செயலாளரோ, நம்முடைய கழக மாவீரர்களோ, மாவட்டந்தோறும் இருக்கிற கழகத்தளகர்த்தர்களோ-கழ கத்தினுடைய செயல் வீரர்களோ, உடன்பிறப்புக்களோ சிறைபட்டு விட்டால் கழகமே அழிந்துவிடும் என்று கருது வார்களேயானால் கழகத்திலே கடைசித் தொண்டனுடைய