பக்கம்:இலங்கையில் ஒரு வாரம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கல்கி

49

“உம்முடைய பெயர் என்ன?”

“விபீஷணன்.”

“தகப்பனார் பெயர்?”

“புலஸ்தியர்.”

“பாட்டனார் பெயர்!”

“பிரம்மா.”

“தகப்பனாரும் பாட்டனாரும் இலங்கையில் பிறந்து இலங்கையில் வசித்தவர்கள்தானா?”

“தகப்பனார் புலஸ்தியர் இலங்கையில் பிறந்து வளர்ந்தவர். அவருடைய பெயரால் பொலன்னருவா என்ற நகரமும் இருக்கிறது.”

“பாட்டனார் விஷயம் என்ன?”

“பாட்டனார் திருப்பாற்கடலில் மகாவிஷ்ணுவின் நாபிக் கமலத்தில் பிறந்து பிரம்மலோகத்தில் வசித்திருப்பவர்!...”

“அப்போதே நினைத்தேன்!” என்றார் அதிகாரி. விபீஷணரை ஏற இறங்கப் பார்த்து, “அப்படியானால் உம் பாட்டனார் இலங்கைவாசி இல்லை!” என்றார்.

“இல்லை. ஆனால் அண்ணன் இராவணனுக்குப் பஞ்சாங்கம் பார்த்துச் சொல்லச் சிலசமயம் இங்கே வந்ததுண்டு.”

“சரி! நீர் இலங்கையின் வம்சாவளிப் பிரஜை உரிமை பெறமுடியாது.”

“அது இல்லாவிட்டால், வேறு எந்தப் பிரஜா உரிமை கொடுத்தாலும் சரிதான்.”

“நீர் இலங்கையில் பிறந்ததற்கும் இருந்ததற்கும் சாட்சி உண்டா?”

விபீஷணர் சிறிது யோசித்துவிட்டு “பிறந்ததற்குச் சாட்சி கிடையாது. இருந்ததற்கு அனுமார் என்று