பக்கம்:இலங்கை எதிரொலி.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சி.பி.சிற்றரசு

27


பிறந்தோமோ, எந்த மண்ணில் நமது மூதாதையர் மன்னர் பரம்பரையென வாழ்ந்தனரோ, எந்த மண்ணின் மணிகள் யெளவன மன்னர்கள் முடியில் ஜொலிக்கக் காரணமாயிற்றோ, எந்த மண் வாழவந்தவனுக்கு வழி விட்டு ஒதுங்கி ஓரத்தில் நிற்கும் பிச்சைக்காரன் நிலையில் நம்மினத்தைக் கொண்டுவந்து நம்மை நிறுத்தியிருக்கிறதோ, எந்த மண் மனித வாழ்வுக்கு வேண்டிய எல்லாம் தன்னகத்தில் கொண்டிருக்கின்றதோ, எந்த மண் நம்மை ஈன்றெடுத்து வளர்த்ததோ எந்த மண்ணின் மொழி ஐந்து மொழிகளின் தாயென விளங்கியதோ, எந்த தமிழ் மற்ற எந்த மொழின் படையெடுப்பாலும் இதுநாள்வரை அழியாதிருக்கின்றதோ, எந்த மண் கையில் திருவோடேந்தி வந்தவரை வேந்தராக்கி நம்மை அவர்களின் மாந்தராக்கி வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கிறதோ அந்த மண்ணை நாம் பெற்றாகவேண்டும். அதை நாமே ஆண்டு தீரவேண்டும். அது நம் சொல்வழி நடக்கவேண்டும். அதன்மேல் படர்ந்திருத்கும் பழமையெனும் தூசைத் துடைக்க வேண்டும். அந்த வேட்கையின் வேகத்தால் விருப்பத்தின் மோகத்தால், தேவையின் தாகத்தால், நம்மைத் தாக்க வரும் எந்த சக்தியையும் நாம் தாக்கித் தகர்த்தெறியக் கடமைப்பட்டிருக்கின்ருேம். திராவிட நாட்டுப் பிரிவினைனப் போரரங்கம், பிளாசிப் போரா, பாணிப்பட் போரா, புது ஆயுதங்களைக் கொண்டா, புரட்சி வேகம்கொண்டா என்ற விளக்கம் தேவையில்லை. நமது குரல் வான் முட்டிக் கொண்டிருக்கின்றது. ஒரு கிளர்ச்சியை சர்க்கார் சட்டைச் செய்யாமல் இருப்பதும், பிறகு செவிசாய்ப்பதும், சிந்திப்பதும், சிந்துபாடுவதும், தூது விடுவதும், துன்பம் கொடுப்பதும், துப்பாக்கியை நீட்டுவதும், தூக்கில் மாட்டுவதும் அவ்வளவையும் மீறினால் சமாதானம் பேசுவதும், தூதுவர்களை அனுப்புவதும் எல்லைகளை நிர்ணயிப்பதும் நாம்