உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சியப் பயணம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 தமிழரசு நேரடியாகச் சொல்ல முடியாவிட்டால் எனக்கு எழு துங்கள். எனக்கு எழுதுவது உங்களுக்குக் கேவலமாக-மரியாதைக் குறைவாகத் தோன்றுமானால் தொலைபேசியிலே கூப்பிடுங் மற்றவர்களிடத்திலே சொல்லி அனுப்புங்கள். கள். களைகிறேன். நான் நாட்டு முன்னேற்றத்திலே, நாட்டு வளத்திலே, நாட்டின் நாணயத்திலே, நேர்மையிலே அனைவருக்கும் பங்கு இரு கிறது என்கிற எண்ணத்தோடு காமராசர் ஆனாலும், மற் வர்கள் யாரானாலும் சொல்லுகின்ற அந்தக் கருத்துக்களைக் கேட்டு நடக்க இந்த அரசு சித்தமாக இருக்கிறது. வீணாக மக்களிடத்திலே ஊழல், ஊழல் என்று பீதிகளைக் கிளப்புவது நல்லதல்லஎன்று கூறி நிதிநிலை அறிக்கையை வார்த் என்பது திரு.கே.ராசாராம்: தலைவரவர்களே! லஞ்சம், ஊழல் என்ப தைப்பற்றி முதலமைச்சர் அவர்கள் பேசிய கருத்தை நான் விளக்கிட விரும்புகிறேன், ஊழல், லஞ்சம் என்ற தைகள் தமிழில் புதியவை அல்ல. எத்தனையோ ஆண்டுக் காலத்துக்கு முந்தியே சேர்ந்திருக்கிறது.ஊழ ல் புதிய விஷயமல்ல. தலைவர் காமராசர் கூறுவதெல்லாம் ஊழல், லஞ்சம் ஆகியவற்றை எல்லாம் நாம் கண்டித்து வந்தோம். அமைச்சர்களில் லஞ்சம் புரிந்தவர்கள் என்று தெரிந்தால் கண்டிப்போம். நடவடிக்கை எடுப்போம். கட்சிக்காரர்கள் இன்னார் இன்ன லஞ்சம் பெற்றார்-ஊழல் ஏற்பட்டது என்றால் பார்த்துக்கொண்டிருக்கமாட்டோம் கண்டிப்போம். ஆனால் இன்று தி. மு. கழகத் தலைமை அதைச் செய்யவில்லை. ஊழல் ஏற்பட்டது என்று தெரிந் திருந்தும்கூட அவர்களைக் கண்டிப்பதில்லை. குற்றம் செய்த வர்களைக் கண்டிப்பதில்லை என்று சொல்லிவருகிறார். ஊழல், லஞ்சம் என்று சொல்லி அதற்காக வேண்டி பொதுவாகச் சொல்லி எதிர்க்கிறார் என்று சொல்லவில்லை; இன்னின்ன குற்றம் புரிந்திருக்கிறார்கள்-கண்டிக்கவில்லை என்று குற்றம் சாட்டுகிறார். முதல்வர் : பூண்டி வாண்டையாரும், உக்கடைத் தேவ ரும், வடபாதி மங்கலம் தியாகராஜ முதலியாரும் அப்பா வுத் தேவரும் - இவர்களெல்லாம் சேர்ந்து சுமார் இருபது ஆயிரம் ஏக்கர்களை உச்சவரம்புச் சட்டத்திலிருந்து தப்பித் துக் கொள்கின்ற அளவுக்கு 1959-ஆம் ஆண்டு டிசம்பர் திங்க ளுக்கு முன்னால், எழுதி வைத்தார்களே, அது பெரிய ஊழல் அல்லவா ? அது காமராசரால் கண்டிக்கப்பட்டதா என்று கேட்க விரும்புகிறேன்.