30
இலட்சிய வரலாறு
முன்னணி நிற்கும் ! இதற்குத் திருச்சி மாநாடு தந்துள்ள ஆர்வத்தைக் கொடுமையான நிலைமையைத் தமது கோணல் புத்தியைக் கொண்டு நீடிக்கச் செய்பவர் உணர்வது நல்லது. சமுதாய இழிவு எது, அதனை ஒழிப்பது எப்படி, எந்த முறையிலே என்பதிலே, திருச்சி மாநாட்டிலே காணப்பட்ட எழுச்சி, கட்சி அடைந்துள்ள புதுக் கட்டத்தைக் காட்டுவதாக இருக்கிறது.
முன்பெல்லாம், சமுதாய சீர்திருத்தத்துக்காகவே இந்தக் கட்சி இருக்கிறது என்று டாக்டர் நாயர் போன்றவர்கள் முழக்கமிட்டு வந்துங்கூட, முற்போக்கான, கொஞ்சம் தீவிரமான கருத்துள்ள தீர்மானம் மா நாட்டிலே வந்தால் ஒரு நடுக்கம் ஏற்படும். எடுத்துக் காட்டாக, ஆதிதிராவிட மக்களை ஆலயங்களிலே அனுமதிக்க வேண்டும் என்று பேசப்பட்டால், அரகரா சிவ சிவா என்று அலறுபவரும், ராம ராமா என்று அழுபவரும், இதைக் கூறிவிட்டு ஓட்டுக்குப் போனால் கிடைக்காதே என்று யூகமுரைத்தவரும், இவ்வளவு புரட்சிகரமாகப் போகக் கூடாது என்று எச்சரிக்கை செய்பவரும், நம்மிடம் இருந்தனர். திருச்சியிலே ஓர் தலைகீழ் மாற்றம் ஆதிதிராவிடர்களுக்குச் சகல கோயில்களிலும் பிரவேசிக்க அனுமதி தரவேண்டும் என்று தீர்மானம் ! இதற்கு, வைதீக எதிர்ப்பு, சனாதனச் சலசலப்பு, பழைமை விரும்பியின் பயம், இவை இல்லை! ஆனால் வேறு என்ன இருந்தது ? "ஆதித்திராவிடருக்கு ஆலயப் பிரவேசம், ஒரு நன்மையும் செய்யாது ! நாம் இதுவரை அங்கே சென்று கெட்டது போதும், பழங்குடி மக்களையும் அங்கு அனுப்பிப் பாழ் செய்யாதீர்! ஆலயங்களிலே என்ன இருக்கிறது? அது ஆரியக் கோட்டை ! கள்ளர் குகை! சனாதனச் சேரி! வைதீக வளை ! நாமோ, அத்தகைய வைதீக பிடிப்பிலிருந்து மக்களை மீட்கும் பணியிலே ஈடுபட்டு இருக்கிறோம். அப்படிப்பட்ட நாம், ஆதித்திராவிடரை ஏன், ஆலயத்துக்குப் போகச் செய்து, அவர்களுள் வாழ்வையும் அறிவையும் பாழாக்குவது?" என்று பல தோழர்கள், ஆர்வமும் ஆவேசமும் கலந்தது மட்டுமல்ல; உண்மையாகவே, கோயில் நுழைவு கேடு