48
இலட்சிய வரலாறு
ஜனநாயகம் ஆழ்ந்து வேரூன்ற வேரூன்ற, பெரியவர்களுக்கே புகழ்பாடும் மனோபாவம் அருகத் தொடங்குகிறது. சாதாரண மனிதனுடைய முக்கியத்துவம் அதிகரித்துக்கொண்டே போகும் போது "படே மனிதர்ளோடு" அவனை ஒப்பிட்டுக் கூற வேண்டிய அவசியம் குறைந்து விடுகிறது. அமெரிக்காவில் "சாதாரண மனிதன் எப்படி வாழ்கிறான் என்பதை எடுத்துரைக்கும் புத்தகங்களும், பத்திரிகைகளும், பெரிய மனிதர்களின் செய்கைகளை விவரிக்கும் புத்தகங்களைப் போலம் பிரபலம் பெற்றுவிளங்குகின்றன."
ஒரே கட்சிக்கே நாடாளும் வாய்ப்பு இருக்கவேண்டும். அந்தக் கட்சி எவ்வளவு தவறு செய்தாலும், எடுத்துக் காட்டுவதுகூடத் தவறு, அந்தக் கட்சியின் தலைவர்களின் புகழ் பாடுவதன்றி வேறோர் காரியம் செய்தலாகாது என்ற மனோபாவம், சர்வாதிகாரத்திலே போய்ச் சேரும் என்ற உண்மையையும், விடுதலைப் போரின் போது, மகாவீரராக யாரேனும் ஒருவர் விளங்கினார் என்றால் நாட்டை ஆளும் நிர்வாக காரியத்திலும் அவர் மகாவீரராகவே இருந்து தீருவர்; அங்ஙனம் இல்லை என்றாலும், அவரை கண்டிப்பது கூடாது என்று கட்டளையிடுவதும், நிச்சயமாக நாட்டு முன்னேற்றத்தைத் தடுக்கு மென்பதையும், அறிஞர் விளக்கிக் கூறியிருக்கிறார். இக்கட்டுரையில் இவர், காங்கிரசுக்கு எதிர்க்கட்சி நடத்திக் கொண்டிருந்தவருமல்ல, உலக நிலைமையும், நாடாளும் முறைகளையும் ஆராய்ந்து இதனைக் கூறினார். ஆனால் இங்குள்ள காங்கிரசாருக்கோ, என்றென்றும் ஆட்சி உரிமை தமக்கே என்ற எண்ணமும், அந்த நிலையைப் பாதுகாத்துக்கொள்ளத் தம்மிடம் அதிகாரம் இருக்கும் இந்நாளிலேயே, மிகக் கடுமையான நடவடிக்கைகள் மூலம், காங்கிரசுக்கு எதிர்க்கட்சி என்று ஏதும் இருக்க முடியாதபடி செய்துவிட வேண்டுமென்னும் எண்ணமும் பலமாகி விட்டது. பேச்சும் நடவடிக்கையும் இதற்கு ஏற்றபடியே இருந்திடக் காண்கிறோம்.
"இவர்களை எல்லாம் பிடித்து ஜெயிலில் போட்டுவிடப் போகிறோம்" என்று மேடையில் பேசுவது, இப்போது காங்கிரஸ் பிரசாரகர்களுக்கு மிகச் சகஜமாகி விட்டது."
.