52
இலட்சிய வரலாறு
புரட்சி என்பது இயங்கும் சக்தி ! அதைப் பொசுக்கிவிட யாராகிலும் ஆகாது. புரட்சி என்பது மக்களின் போராடும் சக்தியின் வழி வருவது. புரட்சி வாவிபத்தின் கூறு! பகுத்தறிவாளர் ஆயுதம். பழமை விரும்பிகள், புரட்டர்கள், எதேச்சாதிகாரிகள், சர்வாதிகாரிகள் ஆகியோருக்கு நஞ்சு. எனவேதான், அத்தகையோர் புரட்சி என்ற சொல்லைக் கேட்டதும் மருட்சி அடைந்தே விடுவர். நீண்டு வளர்ந்து நிற்கும் நெடு மரங்களும் அசைந்து, ஆடி, சுழன்று,அடி அறுபட்டு,விழுந்து நொறுங்கும், சூறாவளி வரின். அதைப் போன்றே ராணுவம், பொக்கிஷம், கர்வம், கபடம், ஆணவம், அகந்தை ஆகிய எல்லா ஆயுதங்களையும் ஒருங்கே படைத்துத் தனக்கு ஒப்பாரும் மிக்.காரும் இல்லை என இறுமாந்து கிடந்த எத்தனையோ எதேச்சாதிகாரிகள் இடர்ப்பட்டு, இடிபட்டு கீழே உருண்டர், புரட்சியின் வேகத்தைத் தாங்க மாட்டாது. எனவே தான் அவர் வழி வந்தவருக்கெல்லாம் புரட்சி என்றதும் மருட்சி ஏற்பட்டு விடுகிறது. மருட்சி அவர்களைக் காப்பாற்றாது. மருட்சிகொண்டோன், பலப்பல கொடுமையான காரியங்களையும் கூசாது செய்வான். எனினும், எச்செயலும் புரட்சிப் புயலில் அவனைச் சிக்கவைக்காது போகாது. இது சரித்திரம்.
எதேச்சாதிகாரிகளுக்கு அரசியல் அதிகாரம் கிடைத்தால், அதனை வைத்துக்கொண்டு சட்டம் கொண்டு புரட்சியை ஒடுக்கப் பார்ப்பர். ராணுவ பலமிருப்பின் புரட்சிக்காரரை சுட்டுக் கொல்லுவர். இரண்டுமின்றி நமது நாட்டில் அந்த நாளிலே இருந்ததாகக் கூறப்படும் ரிஷிகளாக இருப்பின் சபித்து விடுவர். இன்று அந்த 'ரிஷி பரம்பரையில்" வந்தவராகக் கருதப்படும் காந்தியாரும், அவரது பூசாரிகளும், ஒழுங்கு நடவடிக்கை எனும் தண்டத்தை வீசுகின்றனர். ஒன்றுமே இல்லாத பேர்வழிகள் எதோ தங்களாலான விதத்திலே தமது சமர்த்தைக் காட்ட முற்படுவர். இந்தி எதிர்ப்பை அடக்கி விடலாமென எண்ண-