உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய வரலாறு, அண்ணாதுரை.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

இலட்சிய வரலாறு


என்ற 'ஜ்வாலை 'யின் பொறிகளைத் தாங்கி வருவன பத்திரிகைகள், பிரசாரங்கள். பொறிகளை அணைத்து விடுவது ஜ்வாலையை அணைத்ததாகாது.

"உண்மையைக் கேள், குழந்தாய் ! ஜ்வாலை விட்டு எரியும் பெருந் தீயிலிருந்து நான்கு பக்கமும் பொறிகள் பறந்து செல்வது போல்" என்று உபநிஷத்தில் ஒரு இடத்தில் வருவதாகக் கூறுகிறார்கள்.

பொறிகளைக் கண்டு மருண்டு அவைகளை அழித்து விட்டால் பயனில்லை. 'ஜ்வாலை' இருக்கிறது, பொறிகளை, எண்ணற்ற பொறிகளை எடுத்தெடுத்து வீச !

எனவே, மருட்சி கொண்டவர் செயல் ஒருபோதும் புரட்சியை அடக்கிவிடாது என்பதை ஆட்சி செலுத்துவோருக்கு, நாம் எடுத்துக்காட்டுகிறோம்.