56
இலட்சிய வரலாறு
வேண்டியதும், அவசியந்தானா என்று கேட்கப்படுவதைக் கூர்ந்து கவனிப்போம். பிரச்னை, மக்களின் எண்ணிக்கையை மட்டும் கவனித்தால் விளங்காது. அந்தப் பார்ப்பனியம் எனும் முறைக்கு நாட்டிலே உள்ள செல்வாக்கின் அளவே முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டியதாகும். அப்படி கவனித்தால் ஐயர், ஐயங்கார், சர்மா போன்ற பார்ப்பனர்களோடு இது நின்று விடுவதாக இராமல், பார்ப்பனரல்லாதாரில் பலருக்கும் 'சொந்தமான' பிரச்னையாகிவிடக் காணலாம்.
ஒரு முறையைக் கவனிக்கும் போது, அதனை உற்பத்தி செய்த மக்களின் எண்ணிக்கையை மட்டும் கவனிப்பது போதாது — அந்த முறைக்கு நாட்டிலே ஏற்பட்டுள்ள செல்வாக்கின் அளவே முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டும். அப்போது அந்தப் பிரச்னையின் முழு உருவமும் தெரியும்.
பார்ப்பனரிடம் ஏனய்யா பயம் ? அவர்களைக் கண்டு பொறாமை எதற்கு ? அவர்கள் 100-க்கு 3 பேர் தானே ! நீங்கள் 100-க்கு 97 பேரன்றோ! (மைனாரிட்டி) சிறுபான்மைச் சமூகத்திடம் பெரும் பாலான சமூகம் ஏன் பயங்கொண்டு, பாதுகாப்புக் கோரவேண்டும் என்று அடிக்கடி தேசியத் தோழர்கள் கேட்பதுண்டு. அப்படிக் கேட்கும் போதெல்லாம், தங்கள் அறிவின் திறத்தைத் தாமே மெச்சிக்கொள்வர் அத்தோழர்கள்.
சமூகத்தைக் கவனித்தால், பார்ப்பனர் சிறு தொகையினர்.
பார்ப்பன ரல்லாதாரின் மூச்சு, பார்ப்பனரைத் திணறவைக்கும். அவ்வளவு அதிக எண்ணிக்கை யுள்ளவர்கள் தான் பார்ப்பனால்லாதார். ஆனால், பார்ப்பனியம் எண்ணிக்கையைப் பொறுத்ததல்ல ! இதுவரை அதற்குப் பலவழிகளிலும் தரப்பட்ட படைபலத்தைப் பொறுத்திருக்கிறது