பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8 ★ இல்லம்தோறும் இதயங்கள்



“நீ மவராசியா இருக்கணும். நீ இந்த ஊர்ல இருந்து எப்போ போனீயோ, அதுல இருந்தே ஊருல களை இல்ல. இப்ப இருக்கது எல்லாம் துப்புக்கெட்ட முண்டங்க!”

“எங்க அப்பாவுக்கு எப்படி இருக்கு மாமா?”

“அவருக்கென்ன? நல்லாத்தான் இருக்காரு. இப்ப காலையிலகூட வாழத் தோப்புல பாத்தேனே! நாங்கெல்லாம் பழய காலத்து உடம்புமா. அடிச்சி கொன்னாக் கூட ஆறுமாசம் ஆவும்.”

“தம்பி சீரியஸ்ஸுன்னு லட்டர் போட்டுருந்தான்.”

“மாமாவுக்குத் தெரியாம சீரியஸா ஆயிடுமா? கல்லு மாதிரி இருக்காரு. காலையிலகூட என்னப் பாத்து ‘ஒட்டப் பந்தயத்துக்கு வாரீயாடா மாப்பிள்ளன்னு’ கேட்டாரு. ஒன் வீட்டுக்காரன் செளக்கியமா? ஒன் மவனயும் கூட்டிக்கிட்டு வந்திருக்கியா? டேய், பேரா... தாத்தாகிட்ட வாடா! சரிம்மா, மெட்ராஸ்ல இருந்து என் மயினி மவன் வாரதா எழுதியிருந்தான்... அவனப் பாத்துட்டு ஒரு நொடியில வந்துடுறேன். இங்கேயே இரு. மாமா வந்து பெட்டி படுக்கைய இறக்கி வைக்கேன்.”

பேசியவர் போய்விட்டார். மணிமேகலை மீண்டும் கை ஊன்றி, ஊன்றிய கையில் மோவாயை புதைத்து, பிளாட்பாரத்தைப் பார்த்தாள். அவள் மூன்று வயதுப் பையன், அம்மாவின் முகத்தோடு முகத்தை உரசிக் கொண்டு "ரயில் ஏம்மா புறப்படல?" என்று அவள் காதுக்குள் ஊதுவதுபோல் பேசினான். மேலே, பெர்த்தில் கிடந்த சூட்கேஸ், பிளாஸ்டிக் கூடை, ஒரு கோணிப் பார்ஸல் முதலியவற்றை இறக்கமுடியாமல் இறக்கி, பிறகு அவற்றைத் தூக்க முடியாமல் தூக்கி இருக்கையில் வைத்த ஒரு இளம்பெண், மணிமேகலையின் தோளை செல்லமாகத் தட்டிக்கொண்டே “ஒங்களத்தான்... என் பேரு