பக்கம்:இல்லற நெறி.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208

இல்லற நெறி


தால், அது கருப்பையின் வாயினை விரியச்செய்யவும் துணை செய்கின்றது. எனினும், சில சமயம் குழந்தை வேறுநிலை யிலும் இருந்து முதலில் முகம், கை, அல்லது கால், ஆசனம் என்ற முறையில் உதயம்ஆவதுமுண்டு. இத்தகைய பிரசவங் கள் 'அடிப்புறப் பிரசவங்கள் என வழங்கப்பெறுகின்றன; இவைபற்றிய விவரங்களே அடுத்த கடிதத்தில் விரிவாக விளக்குவேன். சில சமயம் குழந்தை கருப்ப காலத்தில் பெரும்பான்மையான பகுதியில் அடிப்புறப் பிரசவ நிலையி லேயே இருந்து பிரசவ காலம் நெருங்குகின்றபொழுது தன் நிலையை மாற்றிக்கொண்டு தல்ை முதலில் வெளிவரும் நிலையை அடைவதுமுண்டு.

புதிதாகப் பிறந்த குழந்தை குவா, குவா என்று கத்து வது இயல்பு: பாதுகாப்புடன் இளஞ்சூடாகவுள்ள தாயின் கருப்பையில் தங்கியிருந்தகுழந்தை சற்றுக்குளிர்ந்த புறவுல கச் சூழ்நிலைக்கு வருங்கால் அதன்வாழ்க்கையில் ஏராளமான மாற்றங்கள் ஏற்படுவது இயல்பு. பிறந்தவுடன் தாயினிட மிருந்து வந்த குருதியோட்டம் இல்லாது போகின்றது; இதல்ை உணவையும் உயிரியத்தையும்" தாயினிடமிருந்து பெறமுடிவதில்லை. "அழுதபிள்ளை பால் குடிக்கும்’ என்பது பழமொழியன்ருே? அழுதால்தான் குழந்தை பிழைக்கும் என்பது இதன் பொருள். பிரசவத்தை விசாரிக்க வருகின்ற வர்கள், குழந்தை அழுகின்றதா?’ என்று கேட்பதை இன் றுங் காண்கின்ருேம். அழுவதால் குழந்தையின் நுரையீரல் களில் சுவாசம் ஏற்படுகின்றது. இதனல் குழந்தை காற்றி லிருந்து நேராக உயிரியத்தை அடைகின்றது. நுரையீரல்கள் செயற்படவே, ஏனைய உறுப்புகளும் செயற்படத் தொடங்கு கின்றன.

பிரசவ வேதனையின்றிப் பிறத்தல்: பிரசவ வேதனையின்றிக் குழந்தை பிறப்பதுதான் இயல்பு. இயல்பாக நடைபெற

65. gjią. Šių pili lografsu ħassir-Breech deliveries 66, a uşiffulb-Qxygen

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/214&oldid=1285182" இலிருந்து மீள்விக்கப்பட்டது