பக்கம்:இல்லற நெறி.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடும்பக் கட்டுப்பாடு 彭6?

23

அன்பார்ந்த செந்தில்வேலனுக்கு,

நலன். நலன் தெரிவிக்க.

கருத்தபைக் கருவிகளைப் பயன்படுத்திக் கருத்தடை செய்யும் முறைகள் ஆண் முறைகள் (கனவளுல் மேற் கொள்ளப்பெறுபவை), பெண் முறைகள்” (மனைவியால் மேற்கொள்ளப்பெறுபவை) என இருவகைப்படும். கருத் தடைக் கருவிகளைக் கையாளுவதற்கு முன்னர் மருத்துவ

ரைக் கலந்து ஆலோசித்து அவர் கூறுகின்றபடி செய்ய வேண்டும்:

ஆண் முறைகள்: ஆண்களுக்குரிய முறைகள் இரண்டு உள்ளன. அவற்றை இக் கடிதத்தில் விளக்குவேன். கலவி யின் பொழுது விந்துப் பாய்மம் யோனிக் குழலின் வாயி லாகக் கருப்பையினுள் நுழையாது தடுப்பதே இந்த முறை களின் தத்துவமாகும். கணவன் இணைவிழைச்சு புரியும் பொழுது விந்து வெளிப்படுவதற்கு முன்னர் ஆணுறுப்பைப் பெண்ணின் யோனிக் குழலினின்றும் எடுத்து விடுவதே முதல் முறையாகும். இதனுல் விந்துப் பாய்மம் பெண்ணின் பிறப் புறுப்புகளுக்கு வெளியில் சிந்திவிடப்பெறுகின்றது. இம் முறையை வெற்றிகரமாகக் கையாண்டால் ஆணின் விந் தணு பெண்ணின் முட்டையணுவினைச் சந்திக்கும் வாய்ப்பு தவிர்க்கப் பெறுகின்றது. இன்று உலகில் முற்போக்கடைந் துள்ள எல்லா நாடுகளிலும் இம்முறை மேற்கொள்ளப் பெறுவதாகச் சமூக வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர். இந்தமுறை பழங்காலந் தொட்டே வழக்கிலிருந்து வரும் ஒரு முறை என்று மானிட இனவரலாற்று அறிஞர்கள் செப்புகின் றனர். இங்கிலாந்தில் இம்முறை கணவன் கவனமுறை

36. & swau & souse (pop-Husband careful method

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/273&oldid=598143" இலிருந்து மீள்விக்கப்பட்டது