பக்கம்:இல்லற நெறி.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமணக்கலை 361

அறிந்திருத்தல் வேண்டும்; அஃதாவது, நடைமுறையி லுள்ள பாலுறவின் பொறிநுட்பத்தை நன்கு அறிந்திருத் தல் வேண்டும் என்பது பெறப்படுகின்றது. இதிலிருந்து, மருத்துவரைப் போல் உடலின் ஒவ்வொரு பகுதிகளையும் கூறு கூருகப் பிரித்து அறிந்திருத்தல் வேண்டுமென்பதில்லை. பாலுறுப்புகளின் அமைப்புபற்றிய அறிவினை ஒரளவு பெற் றிருந்தால் மன நிறைவுள்ள கலவியைத் தம்பதிகள் முற்று விக்க முடியும் என்பதற்கு எள்ளளவும் ஐயமில்லை. பேராசிரியர் ந. சுப்புரெட்டியார் எழுதியுள்ள மானிட உடல்' என்ற நூலைப் படித்தால் இவ்வறிவினை நீ நன்கு பெறுவாய்.

உளவியல் முறையிலும் உள்ளக்கிளர்ச்சி முறையிலும் நோக்கில்ை, தம்பதிகள் பால் துடிப்பின் இயல்புபற்றிச் சிறி தளவு அறிந்திருத்தல் வேண்டும் என்பது புலனுகின்றது. பால் துடிப்பினை எழுப்பக்கூடிய தூண்டல்கள் பற்றியும். ஆணிடமும் பெண்ணிடமும் தோன்றும் பால் துலங்கல்கள், எதிர் வினைகள் ஆகியவற்றின் வேறுபாடுகள்பற்றியும், பாலு றவிற்காகத் தம்பதிகள் ஒருவரையொருவர் அணுகும் மென்மை, 7 சூழ்ச்சி வகை நுட்பமான போக்கு ஆகிய வற்றின் முக்கியத்துவம் பற்றியும் ஒவ்வொரு தம்பதிகளும் நன்கு அறிந்திருத்தல் வேண்டும். இத்தகைய நுட்பம் அறி யாதவர்கள் மிருக உணர்ச்சியுடன் புணர்ச்சியை விரைவாக முடித்துவிட்டுச் சோர்வடைந்து தூங்கிவிடுவர். அகத்துறை பற்றியெழுந்த சங்க இலக்கியப் பயிற்சியும் அகப்பொருள் இலக்கண அறிவும் இத்தகைய நுட்பங்களை அறிவதற்குப் பெருந்துணை புரியும். பொதுவாக வள்ளுவரின் இன்பத்துப் பாலும், சிறப்பாகப் புலவி, புலவி நுணுக்கம் போன்ற இயல்களும் உளவியல் காணுத நுட்பங்களையெல்லாம் நன்கு எடுத்து இயம்புகின்றன. ஒவ்வொரு தம்பதிகளும் அகத் துறைபற்றிய சங்க இலக்கியங்களையும், தொல்காப்பியப்

27. GlostrGolo – Delicacy 28, சூழ்ச்சி வகை-Finesse

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/367&oldid=598349" இலிருந்து மீள்விக்கப்பட்டது