பக்கம்:இல்லற நெறி.pdf/436

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

430

இல்லற நெறி


நாள்வரை உறங்கிய நிலையில் இருக்கும் என்பதை முதலில் கணவன் உணர்தல் வேண்டும் உண்மையில், அவள் இருபது வயது எய்திய பிறகுதான்-இன்னும் பின்னர் என்றுகூடச் சொல்லலாம்-அத்துடிப்பு முழு ஒளர்ச்சியினைப் பெறுகின்றது. மால்' என்ற அறிஞர் பாலுந்தலை' இரண்டு பிரிவாகப் பிரித்துள்ளார்; எதிர்பாலாரை அணுகுதல், தொடுதல், முத்தமிடுதல் போன்ற உடலுறவு கொள்ளுதல், ஒன்று; மற்றென்று. பாலுறவு கொள்ளுதல், சிறுமியிட ம் உடம்பைத் தொடுதல் போன்ற செயலின் விருப்பமே அதிகமாக இருக்கும்; ஆகவே தழுவுதல், அணைதல், முத்தமிடுதல் போன்ற செயல்களே பாலுறவினை விட அவளுக்குத் திருப்தியளிக்கக்கூடியனவாக இருக்கும். சில பெண்கள் திருமணத்தின் தொடக்கத்திலி தந்தே தீவிர மான பால் விருப்பங்களைக் கொண்டிருப்பர்; ஆளுல் ஏனையோர் பல மாதங்கள் கழிந்த பின்னரே-சில ஆண்டு கள் எனக்கூடச் சொல்லலாம்-பாலுணர்ச்சிகள் தகுந்த அளவு எழுப்பப் பெற்றுப் பாலுறவில் தீவிரமான விருப்பங் களைப் பெற்றுப் பாற்செயலிலும் பேரின்பத்தை எய்துவர். மனைவியின் உறங்கிய நிலையிலுள்ள பால்திறன்கள் முழுதும் வளர்ச்சி பெருமையின் காரணமாகவே முதலில் அவளிடம் முழுமையான பால் துலங்களைக் காண முடிகின்றதில்லை.

எனினும் பால்விருப்பமின்மை தொடர்ந்து காணப் பெறின், அந்நிலையைச் சமாளிப்பது அல்லது திருத்துதல் தனிப்பட்டோரின் இயல்பையும் அவரிடம் உள்ள காரணத் தையும் பொறுத்தது. தம்பதிகட்குப் போதுமான அளவு பாற்கல்வி அளித்தல், மனைவியின் அச்சங்களைப் பற்றிய மனப்பான்மைகளை நீக்குதல், காதற்கலையினையும் யுக்தி முறையினையும் பற்றிய விளக்கம் தருதல், திருப்தியானதும் நம்பிக்கையாதுமான கருத்தடை முறைகளைப் பற்றிய

30. Lom ä-Mio11 31. um gylis 5&-Sexual urge

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/436&oldid=1285287" இலிருந்து மீள்விக்கப்பட்டது