பக்கம்:இல்லற நெறி.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணப்பொருத்தம் 43

4.

அன்பார்ந்த செந்தில்வேலனுக்கு, நலன். நலன் தெரிக்க:

சென்ற கடிதத்தில் பெற்ருேர்களிடமிருந்து தம் குழவி கட்கு மரபுவழியாக இறங்கும் பண்புகளைப்பற்றிக் குறிந் பிட்டேன் அல்லவா? அதுபற்றிய சில கருத்துக்களை ஈண்டு விளக்குவேன்.

மானிட உடல் மிகமிகச் சிக்கலான உயிரி ; பல்வேறு வகையான சிறு குறைகள் மரபுவழியாக இறங்கும் தன்மை யுடையது. எனினும், நம்முடைய நற்பேற்றின் காரணமாக மிகப்பெரும்பான்மையான குழவிகள் இத்தகைய குறைக வின்றியே பிறந்துவிடுகின்றன! இவ்வாறு மரபுவழியாகப் பெறுபவை பல்வேறு இயல்பிகந்த உடற்பண்புகள், குருதி பற்றிய நோய்கள், நரம்புபற்றி நோய்கள், சுரப்பிகள்: பற்றிய நோய்கள், மனநோய்கள் அல்லது குறைகள், குருடு செவிடு இவை போன்றவை எண்ணற்ற அரிய குறைபாடுக ளாகும். இத்தகைய சில குறைகள் மரபுவழியல்லாத கூறுக ளாலும் சூழ்நிலையாலும் உண்டாகக்கூடியவை: ஆகவே, ஒவ்வொரு வகையிலும் இந்நிலை மரபுவழியாக வந்ததா அல்லது சூழ்நிலையால் அமைந்ததா என்பதை நிலைநிறுத்த வேண்டியது இன்றியமையாதது.

மரபு வழியின் பொறி நுட்பம்: முதலில் பண்புகள் ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கும், இவ்வாறு தொடர்ந்தும் எவ்வாறு இறங்குகின்றன என்பதை விளக்கு வேன் பெற்ருேர்கள் எண்ணற்ற கூறுகளைத் தம் குழந்தை

45. 2 uliff-Organism: 46. சுரப்பிகள்--Glands,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/49&oldid=598623" இலிருந்து மீள்விக்கப்பட்டது