உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழக்குச் சொல் அகராதி

66

83

சினத்தில் ‘அரிசினம்' என்பதொன்று, அஃது ஓயாமல் தொல்லை தருதலால் உண்டாகும்சினம். அச்சினம் உண்டாகு மாறு பாடாகப்படுத்துதலே சீண்டுதலாம். என்னதான் பொறுத்தாலும், என்னதான் உதவி செய்தாலும் அவன் சீண்டு வதை விடமாட்டான்” என்பது வழங்குமொழி.

சீலையைக் கிழித்தல் - கிறுக்காதல்

துணியைக் கிழித்தல், கிழித்துக் கொண்டிருத்தல் என்பனவும் சீலையைக் கிழித்தல் போல்வதே. கிறுக்கு என்னும் பொருள் தருவதே.

மூளைக்கோளாறில் ஒருவகை, அகப்பட்ட துணிகளைக் கிழிப்பதும், அக்கிழிந்த துணியை உடலில் நினைத்த இடங்களி லெல்லாம் கட்டிக் கொள்வதும் ஆகும். அவ்வழக்கில் இருந்தே சீலையைக் கிழித்தல் என்பதற்குக் கிறுக்கு என்னும் பொருள் வந்தது. “எனக்கு அறிவு சொல்கிறாய்! நான் சீலையைக் கிழித்துக் கொண்டா இருக்கிறேன்” என்பது புரியாது பேசுவார்க்குச் சொல்லும் மறுப்புரை.

சுக்காதல் - உலர்ந்து போதல், மாவாதல்

சுக்கு நீரை அறவே இழந்தது, நன்றாக உலர்ந்து போனது. அதனால் சுக்கு என்பது உலர்தல் பொருளுக்கு அல்லது காய்தல் பொருளுக்கு உரியதாயிற்று. சுக்காக நொறுக்குதல் என்பதில் சுக்கு என்பதற்கு மாவு என்னும் பொருள் உள்ளமை வெளிப்படும். “சுக்காக நொறுங்கி விட்டது” என்பது வழக்காட்சி. சுக்குச் சுக்காக நொறுங்கிவிட்டது என்பது மிக நொறுங்குதலைக் குறிப்பதாம்.

“வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன?” என்பது ஒரு தனிப்பாட்டு. பாறை வகையுள் ஒன்று சுக்காம் பாறை. சுக்காம் பாறை ஓர் ஊர், சுக்காலியூர் சுக்கு திரிகடுகத்தில் முதலாவது.

சுட்டி, செய்யக்கூடாத செயல்களைச் செய்து துயரூட்டுபவன்.

'சுட்டி, என்பது சுட்டெரிப்பவன் என்னும் பொருளில் வருவதாம். அதிலும் 'படுசுட்டி' என்பது அவனுக்கும் பெரிய சுட்டி அல்லது சுட்டியில் தேர்ந்த சுட்டி, “என்பிள்ளைகளுள் நல்லவன் கூரைமேல் கொள்ளிக்கட்டையோடு நிற்கிறானே; அவன்தான் என்றானாம் ஒரு தந்தை. அத்தகையன் செயல் ‘சுட்டி’ விளக்கமாம்.