உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

இளங்குமரனார் தமிழ்வளம்

_

1

என்பது ‘ஓங்குதாங்கு' என்னும் இணைமொழிப் பொருளை ஒருங்கு கொண்டதாம். உயரம் அதற்கு ஏற்ற உடற்கட்டு ஓங்கு தாங்கு எனப்படும். அத்தன்மையுடையதே சோங்கு என்க. வளர்ந் தவர், நெட்டை, கொக்கு, கனத்தவர், குதிர், உரல் இரண்டும் ஒருங்கமைந்தவர் ‘சோங்கானவர், தேக்கு, தோதகத்தி மரங்களில் சோங்குக்குத் தனிச் சிறப்பு. பாரி சோங்கான ஆள் என்பதைப் புறநானூறு காட்டுகிறது. சோங்கு ஆண்மைக் குறைவைச் சுட்டுவ தாகவும் உண்டு. அது சொங்கு வழியது.

சோடை - உள்ளீடு இல்லாமை

நிலக்கடலையுள் ‘சோடை'யுண்டு. சோடை எனப்படுவது ‘பருப்பு இல்லாமல் வெற்றுக் கூடாக இருக்கும் கடலையாகும். கட லையில் ‘சோடை' மிகுதி என்றும், ‘சோடை போகவில்லை' என்றும் கூறுவது வழக்கம். அவ்வழக்கில் இருந்து ‘அவன் ஒன்றும் சோடையில்லை' என்றும் அவன் சோடை என்றும் வழக்கூன்றின. அறிவாற்றல் செயல் தேர்ச்சி இன்மை சோடை யாகவும், அவையுண்மை சோடை இன்மையாகவும் வழங்கு கின்றன. 'சொங்கு சோடை' எனச் சிலர் தன்மையைச் சுட்டுவது உண்டு. சொங்கும் சோடையும் என்பது ஒரு பொருள் சொங்கு

காண்க.

சோதா - உரமிலாப் பருமை

·

நடக்கமாட்டாமல் உடல் பருத்துச் சுறுசுறுப்பு இல்லாத குழந்தையைச் ‘சோதா’ என்பர். பெரியவருள் சோதாவும் உண்டு. சொன்னால் ‘சோதா’ ஏற்பாரா? சண்டைக்கு வந்து விடுவாரே. அதனால் குழந்தைச் சோதாவே நிலைபெற்றது. சொதசொத என்பது அளற்று நிலத்தன்மை. மழை சிறிது பெய்து நின்று விட்டபின் நடைவழி சொதசொதப்பாகச் சேறுபட்டுக் கிடக்கும். சாதசொத என்று கிடக்கிறது என்பர். எருமைத் தொழுவமும் சொதசொதப்பாக இருக்கும். இச் சொதசொதப்பாம் தன்மை போல் தசை 'கொழகொழ' என இருப்பது 'சோதா’ வாம், 'இன்னும் எட்டு வைக்காத சோதாப்பயல்” என்பது சோதாச்

66

சயன்மையுரை.

தகைதல் - விலை தீர்மானித்தல்

தகைதல் கட்டுதல் என்னும் பொருளது. கட்டுப்பாடான நல்ல குணம் தகை எனப்படும். தகைதல் கட்டொழுங்கும் ஆகும். ஒன்றை விலைபேசி ஒப்புக்கொண்டு விட்டால், அவ்வொப்புக் கொள்ளலில் இருந்து எவ்வளவு கூடியதொகை கிடைப்பினும்